’கொடுக்கப்போகிற மரண அடியில அத்தோட ரஜினி கட்சியை களைக்கணும்...’ நாம் தமிழர் கட்சிஆதரவாளர் சவால்..!

Published : Jan 24, 2020, 04:34 PM IST
’கொடுக்கப்போகிற மரண அடியில அத்தோட  ரஜினி கட்சியை களைக்கணும்...’ நாம் தமிழர் கட்சிஆதரவாளர் சவால்..!

சுருக்கம்

ரஜினி கட்சி வேட்பாளர்கள் நிற்கும் 234 தொகுதிகளிலும் திரும்பிய பக்கம் எல்லாம் நாம் தமிழர் கட்சி சிம்ம சொப்பனமாக நிற்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் விடுத்துள்ள சவாலை எஸ்.வி.சேகர் காமெடியாக்கி இருக்கிறார்.  

தம்பி படத்தில் மாதவன் வில்லனை பார்த்து ஒரு வசனம் வரும். நீ எந்த பக்கம் போனாலும் நான் அங்க வந்து நிப்பேன்னு... அதுமாதிரி ரஜினி 234 தொகுதியிலும் நிற்கணும். அவர் வேட்பாளர்கள் திரும்பிய பக்கம் எல்லாம் நாம் தமிழர் கட்சி சிம்ம சொப்பனமாக நிற்க வேண்டும். கொடுக்க போகிற மரண அடியில் ரஜினி அத்தோடு கட்சியை களைக்க வேண்டும்’’என நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் ஒருவர் போட்ட ட்விட்டர் பதிவிற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக ஆதரவாளரும் நடிகருமான எஸ்.வி.சேகர், '’சூப்பர்.  அடுத்த ஜோக் சொல்லு தம்பி. அதுக்காவது சிரிப்பு வருதான்னு பாப்போம்.'’ என தெரிவித்துள்ளார். 

அதேபோல் ரஜினி மகளின் இரண்டாவது திருமணம் நடைபெறுவதற்கு பெரியார்தான் காரணம் என திகவினர் விமர்சித்து வந்தனர். அதற்கும் பதிலடி கொடுத்துள்ள எஸ்.வி.சேகர், ‘’பல முதல் கல்யாண முறிவுக்கே அவர்தான் காரணும் என உளறி இருக்கலாமே. சொம்பு தூக்க ஒரு அளவில்லையா? அடுத்தவங்க தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது கூட அநாகரிகம் என்று  தெரியாத முட்டாள் நாத்திகம்’’ என விமர்சித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

லாட்டரி லீமா ரோஸின் 'மாஸ்டர் பிளான்': எடப்பாடியிடம் போட்ட டீல்..? அதிரும் அரசியல் களம்..!
அதிமுக கூட்டணியில் இணையும் விஜய்..? டெல்லி சமிக்ஞை..! இபிஎஸ் உற்சாகம்..!