இனி டாக்டர் படிப்பே வேண்டாம்...!! எம்பிபிஎஸ்ஸை தலைமுழுகிய தமிழக மாணவர்கள்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 24, 2020, 4:29 PM IST
Highlights

கடந்த ஆண்டு ஆர்வத்தோடு நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 40,000 ஆயிரம் பேர்கள். ஆனால் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 17 ஆயிரம் மட்டுமே விண்ணப்பத்திருப்பதிலே கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வத்தையே நசுக்கிவிட்டார்கள்

நீட் தேர்வு அறிமுகப்படுத்தியப் பிறகு தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவப்படிப்பு கனவாகவே போனது என்றால் மிகையாகாது. குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்கள்  மருத்துவப்படிப்பில் இடம்பிடிப்பது  குதிரைகொம்பானது,  நீட் நுழைவுத்தேர்வில் கட்டாயத்தேர்ச்சிப் பெற்றால்தான் மருத்துவப்படிப்பில் இடம் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டபிறகு அரசு சார்பில் 412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கி நடத்தப்பட்டது.  35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சிப்பெற்றாலும் அரசு மருத்துவக்கல்லூரியில் இருவருக்கு கூட. இடம் கிடைக்காதது வருத்தத்திற்குரியது. 

இதனடிப்படையில் இந்த கல்வியாண்டிர் பெரும்பாலான மாணவர்கள் மருத்துப்பிரிவுகளுக்கானப் பாடங்களை தேர்வுசெய்யவில்லை.  மேலும் தமிழ்நாட்டில் மருத்துப்படிப்பு கனவிலே சிதைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பணம்படைத்தவர்கள் முறைகேடு செய்து  மருத்துவபடிப்பில் சேர்ந்ததெல்லாம் அரங்கேறியது. கடந்த ஆண்டு ஆர்வத்தோடு நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 40,000 ஆயிரம் பேர்கள். ஆனால் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 17 ஆயிரம் மட்டுமே விண்ணப்பத்திருப்பதிலே கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வத்தையே நசுக்கிவிட்டார்கள். முழுமையான பயிற்சி இல்லாமை மத்தியக்கல்வி வாரியம் பாடத்திட்டத்தில் கேள்விகள் எடுப்பதால் மாநிலப்பாடத்திட்டத்தில் படித்தவர்கள் அதிகமதிப்பெண் எடுத்தவர்கள் கூட நீட் தேர்வில் வெற்றிப் பெற இயவில்லை.

 

தற்போது அரசு நடத்தும் பயிற்சியும் நிறுத்தப்பட்டுள்ளது வருத்தத்தையளிக்கிறது. நீட் தேர்வு வேண்டாம் என்பதில்லை இந்தியா முழுவதும் ஒரே மாதிரி பாடத்திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கியப்பிறகே நீட் தேர்வு அமுல்படுத்தப்படவேண்டும். அல்லது மாநிலத்திலே தனி பொதுத்தேர்வு வைத்து தேர்வு நடத்திட வேண்டும். இல்லையேல் அதுவரை நீட் தேர்வினை ரத்து செய்யவேண்டும். சமமான நிலையோடு ஜனயாக உரிமைகள் அனைத்துத்தரப்பினருக்கும் அனைத்தும் கிடைத்திட வழிவகை செய்யவேண்டும். என தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  

click me!