கருணாநிதியை சந்தித்துப் பேசிய ரஜினிகாந்த்... அழைத்துச் சென்ற மு.க.ஸ்டாலின்...

 
Published : Jan 03, 2018, 08:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
கருணாநிதியை சந்தித்துப் பேசிய ரஜினிகாந்த்... அழைத்துச் சென்ற மு.க.ஸ்டாலின்...

சுருக்கம்

rajinikanth met karunanidhi in gopalapuram house

அரசியல் களத்தில் இறங்கப் போவதாக உறுதியுடன் கூறிய ரஜினிகாந்த், திமுக., தலைவர் மு.கருணாநிதியை இன்று மாலை சந்தித்துப் பேசினார். 

கடந்த டிச.31ம் தேதி தாம் அரசியலுக்கு வரப்போவதாகத் தெரிவித்த நிலையில், ஒவ்வொருவராக சந்தித்துப் பேசி வருகிறார் ரஜினி காந்த். தாம் தனியாகப் போட்டியிடப் போவதாகக் கூறியுள்ள ரஜினி, தனிக்கட்சி தொடங்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார். 

7.30 முதல் 8 மணி வரை ரஜினிகாந்த் கருணாநிதியை சந்திக்க நேரம் கொடுக்கப் பட்டது. இதை அடுத்து, போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் இருந்து கிளம்பிய ரஜினி காந்த், அருகில் உள்ள கோபாலபுரத்துக்கு  காரில் புறப்பட்டுச் சென்றார். கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் உடல் நலக் குறைவு காரணமாக ஓய்வில் உள்ள திமுக., மூத்த தலைவர் மு.கருணாநிதியை சந்தித்தார். 

கோபாலபுரம் வந்த ரஜினி காந்த்தை விட்டு வாசலுக்கு வந்து வரவேற்றார் திமுக., செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்.

முன்னதாக, இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான்... என்று முன்னர் கூறினார் ரஜினிகாந்த். 

மரியாதை நிமித்தமாக திமுக., தலைவர் கருணாநிதியை சந்திக்க அவரது இல்லத்துக்குச் செல்கிறேன் என்று கூறியிருந்தார் ரஜினிகாந்த். போயஸ்தோட்ட இல்லத்தில் இருந்து புறப்பட ரஜினி காந்த் செய்தியாளர்கள் கேட்டபோது இவ்வாறு கூறினார். 
 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!