ஜெயிலர் படத்துக்கு ரஜினி ஹீரோ, எங்களுக்கு எடப்பாடி தான் ஹீரோ - செல்லூர் ராஜூ நெகிழ்ச்சி

By Velmurugan s  |  First Published Aug 10, 2023, 4:18 PM IST

ஜெயிலர் படத்திற்கு கதாநாயகன் ரஜினி போல் மதுரை நடைபெறும் மாநாட்டிற்கு கதாநாயகன் எடப்பாடியார் தான் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.


மதுரையில் வரும் 20ம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்காக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை காமராஜர் சாலை, அரசமரம் விநாயகர் கோவிலில் மாநாடு அழைப்பிதழை வைத்து வழிபாடு செய்து பொதுமக்களுக்கு அழைப்பிதழ்களை கொடுத்து மாநாட்டிற்கு  வரவேற்றார்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், வருகிற 20ம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கான அழைப்பிதழை மதுரையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வீடு வீடாக சென்று அதிமுகவினர் வழங்க உள்ளனர். ஜெயிலர் படத்திற்கு கதாநாயகன் ரஜினி போல் மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்கு கதாநாயகன் எடப்பாடி யார் தான்.

Tap to resize

Latest Videos

undefined

"ஓபிஎஸ் முடிந்து போன சகாப்தம்" மதுரை மாநாட்டிற்கு தக்காளியுடன் அழைப்பிதழ் வழங்கிய முன்னாள் அமைச்சர்

மாநாட்டிற்காக ஒரு லட்சத்து 25 ஆயிரம் இருக்கைகள் அமைக்க எடப்பாடியார் உத்தரவிட்டுள்ளார். டிஜிட்டல் முறையில் மாநாடு அமைய உள்ளது. இதில் அதிமுக தொடக்கம் முதல் தற்போது வரை படைத்த சாதனைகளை கண்காட்சியாக மாநாட்டில் இடம் பெற உள்ளது. திமுகவை அழிக்கின்ற மாநாடாக இந்த மாநாடு அமையும். திமுகவுக்கு ஒரு பின்னடைவை உருவாக்கி கொடுக்கும்‌ என்றார்.

வேலூரில் பள்ளி மாணவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் விபத்து; இருவர் சம்பவ இடத்திலேயே பலி

click me!