
தற்போது காலா படத்தின் டிரெய்லர் வெளியானது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த காலா படத்தின் டிரெய்லரிலும் அரசியல் தெரிக்க வசன்ங்கள் வந்துள்ளன. நிலம் உனக்கு அதிகாரம் எனக்கு அது வாழ்க்கை என்றும் உடல்தான் நம்ம ஆயுதம் திரட்டுங்கடா மக்கள என போராட்டத்திற்கு மக்களை திரட்டும் வசனமும் இடம் பெற்றுள்ளன.
மாறாக தற்போது தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமுற்றவர்களை சந்தித்த பின் பேசிய ரஜினிகாந்த் தமிழகம் போராட்டகளமாக இருக்கக்கூடாது என்றும் அப்படி இருந்தால் தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் தயங்குவார்கள் எனத் தெரிவித்தார். காவலர்கள் மீது யாரும் கைவைக்க கூடாது என்றும் அடித்தவர்களின் புகைப்படங்கள் செய்தித்தாள்களிலும் சேனல்களிலும் காட்டவேண்டும் என்றார். அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டுமென கூறினார். மேலும் எல்லாவற்றிற்கும் பதவிவிலகவேண்டும் எனக்கூறுவது சரியான தீர்வாகாது என்றும் கூறியுள்ளார்
படத்தில் போராட்டங்களை சரியென சொல்லும் ரஜினி நிதர்சனத்தில் போராட்டம் தவறு எனக் கூறுவதும் என ரஜினியின் பேச்சு மக்கள் போராட்டத்தை ஆதரிக்காத மனநிலையையே காட்டுகிறது. படத்தில் போராடினா படம் ஜெயிக்கும் நிஜத்தில் போராடின தொழில் வளர்ச்சி இல்ல பாஸ் என்கிற தொனியில் ரஜினியின் பேச்சு இருந்தது.
ஸ்டெர்லைட் மக்கள் போராட்டத்தில் எந்த கட்சி தலைவர்களும் கட்சியின் பெயர் சொல்லி கலந்து கொள்ளக்கூடாது என்றும் கட்சிகளுக்கு இடமில்லை என்று தெரிவித்த வெளிப்படையான ஒரு மக்கள் போராட்டமாகத்தான் ஸ்டெர்லைட் போராட்டம் நடைபெற்று வந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பலரும் முதல் கல்லை போலீஸ்தான் எறிந்த்து என்றும் ஸ்டெர்லைட் குடியிருப்புக்கு கூட அவர்கள்தான் தீவைத்ததாக கூறுகிறார்கள். ஜல்லிக்கட்டிலும் காவல்துறையினர் அங்கிருக்கும் குடிசைகளுக்கு தீவைக்கும் வீடியோவும் வெளியானது அப்போதும் காவல்துறைக்கு ஆதரவாகவே பேசினார் ரஜினிகாந்த்
படம் வேற என் அரசியல் வழி தனி வழியென ரஜினி கூறினாலும் அது எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்தின் பொறுப்பற்ற அரசியல்தன்மைக்கு முட்டுக் கொடுக்கும் வேலையைதான் செய்கிறது ரஜினியின் அரசியல்
ரஜினியின் பேட்டி ஒட்டுமொத்தமான ஆளும் அரசியல் கட்சியின் ‘விஷமிகள்’ என்கிற சப்பைக்கட்டுக்கு ரஜினி சார்பில் கூடுதல் ஒட்டு போட்டு தைத்தது போல் இருந்தது என சமூக ஆர்வலர்கள் பலரும் கூறிவருகின்றனர்.