புதிய டிவி சேனல் தொடங்கும் ரஜினி... விரைவில் ஆரம்பம்!

Published : Dec 20, 2018, 11:16 PM IST
புதிய டிவி சேனல் தொடங்கும் ரஜினி... விரைவில் ஆரம்பம்!

சுருக்கம்

அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி, தன்னை முன்னிலை படுத்தி செய்திகள் வெளியிட, தனி தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் புதிதாக தொடங்க முடிவு செய்துள்ளனர்.

புதியதாக அரசியல் கட்சி ஆரம்பிக்கும் ரஜினி விரைவில் பிரத்யேகமாக புதிய தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் தொடங்க இருப்பதாக ரஜினிகாந்த் மன்ற தலைமைக்கு கழக நிர்வாகியான VM சுதாகர்  அறிவித்துள்ளார்.
 
அரசியல் கட்சில தங்களுக்கான அதிகார பூர்வமாக தொலைக்காட்சி மற்றும் தினசரி நாளிதழ்  நடத்தி வருகின்றனர். திமுகவிற்காக கலைஞர் டிவி, அதிமுகவிற்காக ஜெயலலிதா இருந்தவரை ஜெயா டிவி, மக்கள் டிவி, விஜயகாந்த் கேப்டன் டிவி, வெளிச்சம் டிவி என ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்கான அதிகாரப்பூர்வமாக டிவி சேனல்கள் வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில் புதியதாக அரசியல் கட்சி தொடங்கவிருக்கும், ரஜினிகாந்த் தனது கட்சிக்கான புதிய தொலைக்காட்சி தொடங்க விண்ணப்பித்திருக்கின்றனர். சூப்பர்ஸ்டார் டிவி, ரஜினி டிவி மற்றும் தலைவர் டிவி என மூன்று பெயரை பரிசீலிக்க விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி