ப்பா!! மொத்த கேங்கையும் முட்டாளாக்கிய செம்ம பிளான்... ஓபிஎஸ்ன்னா சும்மாவா? எடப்பாடியை ஏமாற்றிய மாஸ்டர் ஸ்கெட்ச்...

By sathish kFirst Published Dec 20, 2018, 9:05 PM IST
Highlights

அதிமுகவில் ஓபிஎஸ் குடும்பத்தின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடுவதாக தேனி அதிமுக நிர்வாகிகள் கதறுகின்றனர். மணல் திருட்டு, கூலிப்படை ஏவுதல், தற்கொலை, கொலை மிரட்டல் என  தென் மாவட்டத்தில் பன்னீர் செல்வத்தின் தம்பி மீது அடுக்கடுக்கான புகார்கள்,  ஓ.பன்னீர் செல்வத்தின் குடும்பத்தை ‘தேனி மாஃபியா’ என்று  கட்சிக்காரர்கள் அழைக்கும் அளவிற்கு செம்ம ஃபேமஸ் பேமிலி.

மதுரை ஆவின்  தலைவராக  அவசர அவசரமாக பொறுப்பேற்றார் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியான ஓ.ராஜா. அமைச்சர் செல்லூர் ராஜூ, எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா போன்ற முக்கியஸ்தர்கள் அவருக்கு சால்வை அணித்து சிரித்துவிட்டு நகர்ந்த அடுத்த கொஞ்ச நேரத்தில் ஓ.ராஜாவை கட்சியிலிருந்தே நீக்கிய அறிவிப்பு வெளியானது.  

அ.தி.மு.க. கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால்தான் அவர்கள் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும். அந்த அடிப்படையில்தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை அ.தி.மு.க.வில் உள்ள மற்றவர்களும் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் மொத்த அதிமுகவும் கெத்தாக சொல்லி வருகிறது.
 
ஆனால், ஒ.ராஜா என்னவோ புதுசா தப்பு செஞ்ச மாதிரி ஆக்ஷன் எடுத்ததாக அதிமுகவினர் மார்தட்டி வருகிறார்கள்? ஜெயலலிதா இருக்கும் போதே, சைலென்ட்டாக பல வேலைகளை செய்துவந்தனர். அன்னான் பன்னீர் துணை முதல்வராக பதவியேற்றதிலிருந்து,  அண்ணன் இருக்கும் தைரியத்தில்  ஓ.ராஜாவின் ஆட்டம் பெரிதாய் அதிகரித்துவிட்டது.  ஒ.ராஜா மீது ஏகப்பட்ட புகார்கள் இருக்கின்றன. ஆனால், இப்போது திடீரென்று களங்கம் ஏற்படுத்தி விட்டதாக சொல்லி அனைவரின் கண்ணிலும் மண்ணை தூவியது இப்போதான் புரிகிறதென அதிமுகவினரே புலம்பி வருகின்றனர். 

பெரியகுளம் முன்னாள் ஒன்றியச் செயலாளர் செல்லமுத்து தேனி தொகுதியில் செல்வாக்கு மிக்கவர். அதிமுக மாவட்ட பொருளாளராக இருக்கிறார். இவருக்கு மதுரை ஆவின் கூட்டுறவு தலைவர் பதவியை பெற்றுத் தருவதாக ஒபிஎஸ் கூறியிருக்கிறார். ஆனால், ஒ.ராஜா தலைவர் பதவியைக் கைப்பற்ற  தினகரனின் உதவியோடு தம்பிக்கு உதவியிருக்கிறார். இதனால் செல்லமுத்து ஒரு பெரிய கூட்டத்தோடு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேரப்போவதாக தெரியவந்தது.

இதையடுத்து, எடப்பாடியிடமும், அதிமுக வட்டாரத்திலும் தன்னை யோக்கியராக காட்டிக்கொள்ள தம்பியை கட்சியிலிருந்து விலக்குவதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார். ஒ.ராஜாவின் ஆவின் தலைவர் பதவியை  பறிக்காமல், வெறும் கட்சி பதவியை மட்டும் பறித்துவிட்டு அதிமுக நிர்வாகிகள் கண்ணில் மன்னைத் தூவி இருக்கிறார்.

ஒபிஎஸ்சுக்கு தெரியாமலா ஆவின் தலைவர் பதவிக்கு விண்ணப்பித்தார்? ஒபிஎஸ் ஆதரவு இல்லாமலா அவருக்கு அதிமுகவினர் வாக்களித்தனர்? வெள்ளிக்கிழமை பதவி ஏற்கப்போவதாக சொல்லிக்கொண்டிருந்த ஒ.ராஜா, கட்சியிலிருந்து நீக்கப்படுவதை  தெரியாமலா அவசரஅவசரமாக  பதவி ஏற்றார். கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தாலும், ஒ.ராஜா ஆவின் தலைவராக நீடிப்பதை தடுக்க முடியவில்லையா, இதெல்லாம் பக்கா பிளான் என ஒட்டுமொத்த அதிமுகவினர்  தாறுமாறாக கேள்வியை தெறிக்க விட்டுள்ளனர்.  

click me!