உதயநிதி ஸ்டாலினின் செல்வாக்கைப் பார்த்து ரஜினி பயப்படுறாராம், நடுங்குறாராம்!: இந்த ஜோக்கை சொன்ன மனுஷன் யார் தெரியுமா?

By Vishnu PriyaFirst Published Dec 24, 2019, 7:29 PM IST
Highlights

*    நம் அண்டை நாடுகளில் ஒன்று எப்போதும் நமக்கு தொல்லை தருகிறது. ஜம்மு - காஷ்மீர் விஷயத்தில், பயங்கரவாதிகளுக்கு பயிற்சியும், நிதியுதவியும் அளிக்கிறது. ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஓர் அங்கம், இதில் எந்தவிதமான சமரசத்துக்கும் இடமில்லை. 
 

*    நம் அண்டை நாடுகளில் ஒன்று எப்போதும் நமக்கு தொல்லை தருகிறது. ஜம்மு - காஷ்மீர் விஷயத்தில், பயங்கரவாதிகளுக்கு பயிற்சியும், நிதியுதவியும் அளிக்கிறது. ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஓர் அங்கம், இதில் எந்தவிதமான சமரசத்துக்கும் இடமில்லை. 
-    வெங்கையா நாயுடு (துணை ஜனாதிபதி)

*    மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில், விவசாயிகளின் வருவாய் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இது திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனை. பயிர் காப்பீட்டு திட்டத்தை, மத்திய அரசின் உதவி இல்லாமல், மாநில அரசே திறம்பட செயல்படுத்தி வருகிறது. 
-    மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதல்வர்)

*    குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை எதிர்த்து தி.மு.க. நடத்திய பேரணியில் பங்கேற்பதாக கமல் முதலில் சொன்னது உண்மைதான். ஆனால், சிகிச்சைக்காக அவர் வெளிநாடு செல்வதால் இப்பேரணியில் பங்கேற்க முடியவில்லை. இதை தெளிவாக ஸ்டாலினிடம் நாங்கள் எடுத்துச் சொன்னோம். அவரும் அதை ஏற்றுக் கொண்டார். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. 
-    முரளி அப்பாஸ் (ம.நீ.ம. அமைப்புச் செயலாளர்)

*    ஒரு புதிய சினிமாவுக்கு தான் பாடல் எழுதுவதாக இருந்தால், அப்படம் துவங்கும் முன்பே அதில் தான் பாடல் எழுதுகிறேன்! என்று அறிவிப்பது வைரமுத்துவின் வழக்கம். பொன்னியின் செல்வன் படத்தில் 12 பாடல்களை தான் எழுதுவதாக வைரமுத்து சொல்லியிருந்தார், அதற்காக சில ஆய்வுகளை செய்து வருவதாகவும் கூறியிருந்தார். ஆனால் பட அறிவிப்புகளில் வைரமுத்துவின் பெயர் இல்லை. இதனால் கடும் கொந்தளிப்பில் இருக்கிறாராம் வடுகப்பட்டிக்காரர்.
-    பத்திரிக்கை செய்தி. 

*    நீலகிரியில் மலைவாழ் மக்கள் அதிகம் வாழ்வதால் மத மாற்றம் அதிகளவில் நடக்கிறது. இதை தடுக்கும் வகையில் தமிழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை பா.ஜ.க.வும் வலியுறுத்தும். இந்த நேரத்தில்  நான் இன்னொரு விஷயத்தையும் சொல்லி ஆக வேண்டும். தி.மு.க. தலைவர் ஸ்டாலினை நம்பி, மாணவர்கள் தங்களது வாழ்க்கையை தொலைத்துவிட வேண்டாம். 
-    வானதி சீனிவாசன் (பா.ஜ.க.பொதுச்செயலாளர்)
*    அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தில், பதற்றத்தை ஏற்படுத்தி, பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்! என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 
-    எடப்பாடி பழனிசாமி (முதலமைச்சர்)

*    உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தைரியமில்லாத ஸ்டாலின், குடியுரிமை சட்ட திருத்த மசோதா விவகாரத்தை  எதிர்த்து போராட்டம், பேரணி என்ற பெயரில் குழப்பம் விளைவிக்கிறார். இதை நன்கு உணர்ந்துள்ளனர் மக்கள். இடைத் தேர்தல் போல் உள்ளாட்சி தேர்தலிலும் ஸ்டாலினின் அணிக்கு மக்கள் பாடம் புகட்டிட வேண்டும். 
-    ஆர்.பி.உதயகுமார் (வருவாய்த்துறை அமைச்சர்)

*    முஸ்லிம்களை நாட்டை விட்டு வெளியேற்ற போகிறார்கள்! எனும் பீதியை சிலர் கிளப்பியுள்ளனர். அதற்கு நம் சட்டத்தில் வழியே கிடையாது. மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட பொய் புகார் இது. அப்படியொரு நிலை வந்தால் நான் தான் முதல் ஆளாக நின்று போராடுவேன். 
-    சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி தலைவர்)

*    தி.மு.க.வும், காங்கிரஸும்தான் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுத்தன. இப்போது அந்த இரு கட்சிகளும் இலங்கைத் தமிழர்களுக்காக போராடுவதாக கூறுகின்றனர். தமிழர்கள் எங்கும் அமைதியாக இருக்க கூடாது என்பதுதான் அந்த கட்சித் தலைவர்களின் எண்ணம். 
-    அர்ஜூன் சம்பத் (இந்து மக்கள் கட்சி தலைவர்)

*    குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்க்க, மாணவர்களை தி.மு.க. தூண்டி விடுகிறது. மாணவர்களைப் பயன்படுத்தி அரசியல் லாபம் பெற அக்கட்சி முயல்கிறது. ஆனால் இ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. அரசு எப்போதும் தமிழர்களின் நலனை, உரிமையை விட்டுக் கொடுக்காது. 
-    ராஜேந்திர பாலாஜி (பால் வளத்துறை அமைச்சர்)
*    ரஜினி ரசிகர்கள் உதயநிதியை தறிகெட்டு விமர்சிக்கிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்? உதயநிதியின் செல்வாக்கப் பார்த்து அவர்கள் பயப்படுகிறார்கள் என்றுதானே அர்த்தம்! ரஜினி பெரிய   உத்தமரா, நல்லவரான்னு அவரது ரசிகர்களே சொல்லட்டும். அரசியலுக்கு வரும் வரை சமூக அக்கறையுடன் ரஜினி நடந்து கொள்ளவேண்டும். சும்மா கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும். 
-    ஜோயல் (தி.மு.க. இளைஞரணி து.செயலாளர்)

click me!