போலீசுக்கு டிமிக்கி கொடுக்கும் ஆண்டவர் ஃபேன்ஸ்! வயிற்றெரிச்சலில் சூப்பரின் அபிமானிகள்...

Asianet News Tamil  
Published : Oct 30, 2017, 05:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
போலீசுக்கு டிமிக்கி கொடுக்கும் ஆண்டவர் ஃபேன்ஸ்! வயிற்றெரிச்சலில் சூப்பரின் அபிமானிகள்...

சுருக்கம்

Rajinikanth fans angry on kamal fans

கமல் புலி பதுங்கியது களத்தில் பாய்வதற்குத்தான் என்று இப்போது புரிவதாக அரசியல் விமர்சகர்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றனர்!

கடந்த சில மாதங்களாக ட்விட்டரிலும், மீடியா கேமெராக்களின் முன்பும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் மிக வீரியமான அரசியல் விமர்சனங்களை வைத்துக் கொண்டிருந்தார் கமல். களத்திற்கு வராமல் இணையத்திலேயே உலவிக் கொண்டிருந்ததால் அவரை ‘ட்விட்டர் அரசியல்வாதி’ என்று அ.தி.மு.க. தரப்பு ஏளனம் செய்தது. 

ஆனாலும் அரசுக்கெதிரான அவரது செந்தமிழ் நைய்யாண்டிகளும், டெல்லி முதல்வரே அவரை தேடி வந்து அரசியல் ஆலோசித்ததையும், இவர் கேரள முதல்வரை தேடிச்சென்று அரசியல் ஆலோசனை பெற்றதையும் சற்றே கலவரமாகத்தான் கண்ணுற்றது அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும். 

தினமும் இணையம் வழியே அரசியல் நெருப்பை மூட்டிக் கொண்டே இருந்த கமல்ஹாசன் தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன் திடீரென மெளனமானார். கேட்டதற்கு ‘அவருக்கு காய்ச்சல்’ என்று தகவல் வந்தது. ஆனால்  ‘கமலின் பரபரப்பு அம்புட்டுதேன்’ என்று அ.தி.மு.க.வினர் நக்கல் கணை வீசினர். 

இந்நிலையில்தான் கடந்த சனிக்கிழமையன்று காலையில் திடீரென சென்னை எண்ணூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் போய் நின்றார் கமல். ஆலைக்கழிவான சாம்பல் சைத்தானால் அப்பகுதி மக்கள் படும் துயரங்களையும், வட சென்னைக்கு ஏற்பட இருக்கும் அபாயம் பற்றியும் நேரடி விசிட் மூலம் விளக்கினார், சில விளக்கங்களையும் பெற்றார். 

கமலின் சாப்டர் மெல்ல முடிகிறது என்று நினைத்த அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சியினருக்கு அவர் களமாட துவங்கிய பாய்ச்சல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கமல் இப்படி களமிறங்க துவங்கியிருக்கும் நிலையில் தமிழகமெங்குமிருக்கும் அவரது இயக்கத்தினரும் விறுவிறு பணிகளில் களமிறங்கியுள்ளனர். அந்தந்த மாவட்டங்களில் நிர்வாகிகளும், ரசிகர்களும் இணைந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். சில இடங்களில் வெளிப்படையாகவும், பல இடங்களில் மறைமுகமாகவும் இந்த கூட்டம் நடந்திருக்கிறது. 

கோவை உள்ளிட்ட சில இடங்களில் வெளிப்படையாக நடந்த கூட்டத்தில் “கமல் எடுக்கும்  முடிவுக்கு முழு ஆதரவு அளிப்போம், அவரது மக்கள் நல பணியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வோம். அவரது பிறந்த நாள் விழாவில் ஏழை எளிய மக்களுக்கு நல்லது செய்வோம். சென்னையில் அடை பெற இருக்கும் விழாவில் மிக திரளாக கலந்து கொண்டு அதை வெற்றி பெற வைப்பதோடு, நமது பலத்தையும் பிறருக்கு காண்பிப்போம்.” என்று முடிவு செய்திருக்கிறார்கள். 

கடந்த ஆண்டு வரை இந்த மாதிரியான கூட்டங்கள் வெகு அரிதாகத்தான் நடைபெறும். அப்போது அதில் பேசும் நபர்கள் ‘உலக நாயகன், அண்ணன் கமல்ஹாசன், நாயகன், ஆழ்வார்பேட்டை ஆண்டவர்!’ என்றெல்லாம்தான் அவரை விளிப்பார்களாம். ஆனால் கமல் அரசியல்வாதி அடவு கட்டிய பின் நடைபெற்று வரும் இந்த கூட்டங்களில் அவரை தலைவர்! என்றே அழைத்துள்ளனர். இதன் மூலம் கமலின் ரசிகர்கள் தீவிர அரசியல் சிந்தனைக்கு மாறிவிட்டனர் என்பது புலனாகிறது. சில இடங்களில் கமல் மன்ற நிர்வாகிகள் உணர்ச்சிவசப்பட்டு ‘நாளைய தமிழக முதல்வரான நம் உலக நாயகன்’ என்றபோது அரங்கம் அதிர கரவொலியாம். 

எங்கேயெங்கே என்னென்ன நிகழ்வுகள் நடந்தன, அதில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன? என்பது உள்ளிட்ட அத்தனை விஷயங்களும் உடனடியாக கமலின் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. 

இதில் ஒரு ஹைலைட் என்னவென்றால் கமல் மன்றத்தினர் இப்படி கூட்டம் போடுவது குறித்து உளவுத்துறை போலீஸுக்கு முதலில் தெரியவில்லை. பிறகு கேள்விப்பட்டு நிர்வாகிகளுக்கு போன் போட்டு ‘நண்பா என்னென்ன தீர்மாணம் போட்டீங்கன்னு வாட்ஸ் ஆப் பண்ணுங்க!’ என்று இறங்கி வந்து கேட்டிருக்கிறார்கள். இதுதான் சமயமென்று கமல் ரசிகர்களும் செம கெத்து காட்டுகிறார்களாம். 
இதையெல்லாம் கேள்விப்பட்டு சுப்பரின் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு ஒரே வயித்தெரிச்சலாம்ல!
 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்.! உண்மை நிலவரம் மாறும் என மார்த்தட்டும் தளபதி.! குத்தாட்டம் போடும் திமுக தொண்டர்கள்.!
Exit Poll 2026: மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.! தளபதி விஜய் கையில் 24 முத்துக்கள்.! அதிமுகவின் நிலை என்ன தெரியுமா?