குடும்ப திருமணத்தில் ஆப்சென்ட் ஆன மு.க.ஸ்டாலின்!

Asianet News Tamil  
Published : Oct 30, 2017, 04:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
குடும்ப திருமணத்தில் ஆப்சென்ட் ஆன மு.க.ஸ்டாலின்!

சுருக்கம்

MK Stalin who is an abstent in family marriage!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மதுரை சென்றார். அங்கு முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், வேற்றுமையில் ஒற்றுமை கண்டவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றார்.  திமுக ஆட்சி அமைந்தால், மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டப்படும் என்றும் கூறினார்.

இந்த நிலையில், மு.க.முத்துவின் மகள் வழிப் பேரன் மனு ரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்சிதாவுக்கும், சென்னையில் இன்று திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார். மணமக்கள், கருணாநிதியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். இந்த திருமணத்தில், கருணாநிதி மற்றும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனர்.

இந்த திருமண விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, கலந்து கொண்டார். அப்போது கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.

கடந்த ஓராண்டாக எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காத கருணாநிதி, குடும்ப திருமண விழாவில் கலந்து கொண்ட நிலையில், மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது பல கருத்துகளுக்கு வழிவகை செய்துள்ளது.கருத்துக்களுக்கு வழிவகை செய்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்.! உண்மை நிலவரம் மாறும் என மார்த்தட்டும் தளபதி.! குத்தாட்டம் போடும் திமுக தொண்டர்கள்.!
Exit Poll 2026: மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.! தளபதி விஜய் கையில் 24 முத்துக்கள்.! அதிமுகவின் நிலை என்ன தெரியுமா?