
தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு :-
என் பிறந்தநாளன்று என்னை அன்புடன் வாழ்த்திய மத்திய அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களுக்கும், திரு. ராஜ்நாத் சிங், திரு. நிதின் கட்கரி, பாராளுமன்ற சபாநாயகர் திரு. ஓம் பிர்லா, பல மாநில ஆளுநர்களுக்கும், திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும். திரு. ஓ. பன்னீர்செல்வம், திரு. ஜி.கே வாசன், திருநாவுக்கரசர், திரு.அரங்கராஜன், திரு. பொன் ராதாகிருஷ்ணன், திரு.அண்ணாமலை, திரு.அன்புமணி ராமதாஸ், திரு.திருமாவளவன், திரு.சீமான்,டிடிவி.தினகரன், திருமதி. சசிகலா அவர்களுக்கும் மற்றும் பல மத்திய மாநில அரசியல் நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. கமலஹாசன், திரு.இளையராஜா, திரு.பாரதிராஜா, திரு. வைரமுத்து, திரு. அமிதாப்பச்சன், திரு. ஷாருக்கான், திரு.சச்சின் டெண்டுல்கர் திரு.ஹர்பஜன்சிங், திரு. வெங்கடேஷ் மற்றும் பல பிரபலங்களுக்கும் திரையுலகை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும் ஊடக பத்திரிகை நண்பர்களுக்கும் என் நலனுக்காக கோயில்களில் பூஜைகளும் ஹோமங்களும் அன்னதானம் நடத்தி பிரார்த்தனை செய்த என்னை வாழ வைக்கும் தெய்வங்களான என் ரசிக பெருமக்களுக்கும் தமிழக மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் நன்றி தெரிவித்துள்ள பட்டியலில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெயர் விடுபட்டுள்ளது. ரஜினிகாந்த் அறிக்கையை மேற்கோள் காட்டி பலருக்கும் நன்றி தெரிவித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏன் தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கவில்லை? உங்களை முதலில் வாழ்த்திய தமிழக முதல்வருக்கு தானே நன்றி தெரிவித்து இருக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு டுவிட்டரில் நேரடியாகவே பிறந்த நாளுக்கு வாழ்த்தியதற்காக ரஜினா காந்த, என்னுடைய பிறந்தநாளன்று என்னை வாழ்த்திய என் அருமை நண்பர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார். இந்த டுவிட்டை ரஜினி ரசிகர்கள் பகிர்ந்து பதிலளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.