Tamilnadu Rain: அட கடவுளே.. இன்னும் 5 நாட்களுக்கு மழையா..? சென்னை வாசிகளை கலங்க வைக்கும் இரவு நேர மழை.

Published : Dec 13, 2021, 01:32 PM IST
Tamilnadu Rain: அட கடவுளே.. இன்னும் 5 நாட்களுக்கு மழையா..? சென்னை வாசிகளை கலங்க வைக்கும் இரவு நேர மழை.

சுருக்கம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.  

கடந்த சில வாரங்களாக  தமிழகத்தில் கொட்டி தீர்த்து வந்த பேய்மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை வாசிகளை மீண்டும் கலக்கமடைய செய்துள்ளது.  தமிழகத்தில்  கடந்த சில வாரங்களாக கொட்டித்தீர்த்த வடகிழக்கு பருவமழையால் ஒட்டுமொத்த தமிழகமும் ஸ்தம்பித்ததாது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, தூத்துக்குடிபோன்ற மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடந்த 1 மாதத்தில் சென்னை மூன்று முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக மழையில் தீவரம் குறைந்திருந்த நிலையில்  மீண்டும் இரவு நேரங்களில் மழை பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

முற்றிலும் மழை ஓய்ந்துவிட்டது என நிம்மதி பெருமூச்சு அடைந்த சென்னைவாசிகளுக்கு மீண்டும் இரவு நேர மழை கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது.  இந்நிலையில் மேலும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- வடகிழக்கு பருவ காற்றின் (Wind Convergence) காரணமாக 13.12.2021, 14.12.2021,:  கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 15.12.2021, 16.12.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்  17.12.2021: தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்  பெய்யக்கூடும்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): சத்யபாமா பல்கலைக்கழகம் செம்மஞ்சேரி (செங்கல்பட்டு) 5, காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) தலா 5, ஒய்எம்சிஏ நந்தனம் (சென்னை) 4, எம்ஆர்சி நகர் (சென்னை),  காட்டுக்குப்பம் (காஞ்சிபுரம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), டிஜிபி அலுவலகம் (சென்னை), ஆர்எஸ்மங்கலம் (இராமநாதபுரம்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), ஆரணி (திருவண்ணாமலை), எம்ஜிஆர் நகர் (சென்னை) தலா 3, 

எழிலகம் (சென்னை), மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), தொண்டி (ராமநாதபுரம்), செம்பரபாக்கம் (திருவள்ளூர்), போளூர் (திருவண்ணாமலை), சென்னை விமான நிலையம் (சென்னை), மணிமுத்தாறு (திருநெல்வேலி), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), செய்யார் (திருவண்ணாமலை), களவை  (இராணிப்பேட்டை), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), திருப்போரூர் (செங்கல்பட்டு), திருவாலங்காடு (திருவள்ளூர்), பாபநாசம் (திருநெல்வேலி), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), சேரன்மாதேவி (திருநெல்வேலி) தலா 2, மீனவர்களுக்கான எச்சரிக்கை: 13.12.2011 முதல் 17.12.2021 வரை: குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பபகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய அன்புமணி..! டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு..! ஆதாரத்தை காட்டி பாமக அருள்..!
மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!