ஸ்டாலின், அழகிரி, கனிமொழிக்கு ஆறுதல் சொன்னேன்... கருணாநிதியை பார்த்த பின் ரஜினி பேட்டி!

Asianet News Tamil  
Published : Jul 31, 2018, 09:26 PM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
 ஸ்டாலின், அழகிரி, கனிமொழிக்கு  ஆறுதல் சொன்னேன்... கருணாநிதியை பார்த்த பின் ரஜினி பேட்டி!

சுருக்கம்

rajinikanth arrives at Kaveri Hospital to meet Kalaignar and enquire about his health to Stalin

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.

உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். அவரை துணை  குடியரத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்த், கருணாநிதி உடல் நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். 

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்,  இந்திய அரசியலின் மூத்த தலைவர் டாக்டர் கலைஞரின் உடல்நலம் விசாரிக்க வந்தேன்.  அழகிரி, ஸ்டாலின், கனிமொழி எல்லாரும் அங்கே இருந்தார்கள், அவர்களுக்கு ஆறுதல் சொன்னேன். டாக்டர் கலைஞர் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் இவ்வாறு நடிகர் ரஜினி கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!