மதுரையிலா, கோவையிலா...? ரஜினியின் ‘ஆன்மிக அரசியல்’ மாநாடு! கட்சிக் கொடி பெயர் தயார்?

 
Published : Jan 15, 2018, 07:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
மதுரையிலா, கோவையிலா...? ரஜினியின் ‘ஆன்மிக அரசியல்’ மாநாடு! கட்சிக் கொடி பெயர் தயார்?

சுருக்கம்

rajini will announce his party symbol soon in madurai or kovai

பொங்கல் திருநாளான ஜன.14 ஞாயிற்றுக் கிழமை நேற்று துக்ளக் இதழின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் சில அரசியல் ரீதியான தகவல்களை வெளிப்படையாகப் பேசியுள்ளார் இதழின் ஆசிரியரும் பத்திரிகையாளருமான எஸ்.குருமூர்த்தி. 

தமிழக அரசியல் சாணக்கியர் என்று பெயரெடுத்தவர் துக்ளக் இதழாசிரியராக இருந்த சோ ராமசாமி. அவர் இருந்த போது, துக்ளக்  இதழின் ஆண்டு விழா பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். பல அரசியல் விமர்சனங்கள் அங்கே களை கட்டும். அரசியல் முடிவுகள், அரசியலின் போக்கு, எந்த விதமான பின்விளைவுகள் ஏற்படும் என்றெல்லாம் சோ பேசும் போது அதை உன்னிப்பாக அதன் வாசகர்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளும் கேட்டுக் கொள்வார்கள். 

அந்தப் பொறுப்புக்கு இப்போது வந்துள்ள எஸ்.குருமூர்த்தி, முன்னாள் ஆசிரியர் சோவின் பாணியில் நேற்று கூட்டத்தை நடத்தி, அதே போல் சில கருத்துகளைச் சொன்னார். அதில் ஒன்று, ரஜினியின் அரசியல் மற்றும் கூட்டணி குறித்தானது. பாஜக., ரஜினியுடன் ஒத்துப் போக வேண்டும் என்ற கருத்தைச் சொல்ல, அதனை பாஜக., பரிசீலிக்கும் என்று கூறினார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா. 

இந்நிலையில், ரஜினியின் ஆன்மிக அரசியல் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி கட்சியை அறிவிக்கும் முன்னரே அவர் கட்டம் கட்டப்பட்டார். பலரும் அவருக்கு எதிர்ப்புக் குரல் எழுப்பினர். அதீத எதிர்ப்பே கூட ரஜினியின் முடிவுகளை சற்று மட்டுப் படுத்துவதற்காகத்தான் மேற்கொள்ளப் பட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டது. ஆனால், ஆன்மிக அரசியல் என்ற வார்த்தையைச் சொல்லி அதிர்வலையை ஏற்படுத்திய ரஜினி, அடுத்து தன் கட்சிக்கான  கொள்கை, திட்டங்கள் தயாரிக்கும் பணியை முடுக்கி விட்டுள்ளார். இதை அடுத்து விரைவில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அவர் அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே ஒரு நிருபர் உங்கள் கட்சியின் கொள்கை என்ன என்று கேட்டபோது, தனக்கு தலை சுற்றியதாகக் கூறினார் ரஜினி. எனவே அவர் இனிமேல் தான் ஆன்மிக அரசியலின் அடிப்படையை வைத்து கொள்கையை தீர்மானிக்க உள்ளார் என்று கூறப்பட்டது. 

தொடர்ந்து, அரசியல் பாதைக்கான துவக்கமாக,  ஜனவரி 4ஆம் தேதி பாபா முத்திரை கொண்ட ரஜினி பேரவைக்கான மொபைல் அப்ளிகேஷனை வெளியிட்டார். கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் வகையில், www.rajinimandram.org என்ற தனி இணைய தளத்தை தொடங்கி, அவற்றின் மூலம் ரசிகர்களும் பொதுமக்களும் உறுப்பினராகச் சேரும்படி அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்ற பெயரை, ரஜினி மக்கள் மன்றம் என பெயர் மாற்றம் செய்து இணையதளத்தில் ரசிகர் மன்றத்தின் பெயரை மாற்றி அறிவித்தார்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று தனது போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்த ரசிகர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார் ரஜினிகாந்த். தொடர்ந்து டுவிட்டரில் வாழ்த்துச் செய்தி  அறிவித்தார்.  அதில் பாபா முத்திரை தவறாமல் இடம் பெற்றிருந்தது.  இப்போது,  கட்சிக்கு கொள்கை, திட்டங்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்சி பெயர், கொடி அறிவிப்பு விரைவில் மதுரை அல்லது கோவையில் ரசிகர்களை அழைத்து பிரமாண்ட மாநாடு நடத்தி அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!