ஜெயலலிதாவுக்காக தவித்துப்போன ரஜினி... எம்.ஜி.ஆர் வீட்டில் நடந்தது என்ன..? சசிகலா வெளியிட்ட உண்மை..!

By Thiraviaraj RMFirst Published Jul 17, 2021, 5:24 PM IST
Highlights

ஜெயலலிதாவுக்காக குரல் கொடுத்த ரஜினி குரல் கொடுத்ததாக  சசிகலா தெரிவித்துள்ளார். 
 

ஜெயலலிதாவுக்காக குரல் கொடுத்த ரஜினி குரல் கொடுத்ததாக  சசிகலா தெரிவித்துள்ளார். 

சசிகலா என்னும் நான் என்கிற தலைப்பில் தனியார் தொலைக்காட்சி பேட்டியளித்துள்ளார் சசிகலா. அப்போது பழைய சம்பவங்களை பகிர்ந்துள்ளார். அதன் ஒரு பகுதியாக எம்.ஜி.ஆர் மறைவின்போது நடந்த ஒரு சம்பவத்தை தெரித்துள்ளார். ‘’எம்.ஜி.ஆர் மறைந்த தகவலை அக்காவுக்கு (ஜெயலலிதா) போனில் தொடர்பு கொண்டு சொன்னேன். அக்கா அதிர்ச்சியாகி போனை வைத்து விட்டார். பிறகு நானும் டி.டி.வி.தின்கரனும் போயஸ் கார்டனுக்கு சென்றோம். அங்கிருந்து மூன்று பேருன் கண்டெசா காரில் நேராக சென்றோம்.

ஆனால், அங்கு கேட்டை திறக்கவில்லை. எவ்வளவோ மன்றாடிப்பார்த்தும் கேடை திறக்க மறுத்து விட்டனர். அப்போது ஒரு முடிவுக்கு வந்தோம். டிரைவரை அழைத்து காரை ரிவர்ஸ் எடுத்து கேட்டை உடைத்து உள்ளே போக சொன்னோம். காரை ரிவர்சஸ் எடுத்த சத்தத்தை கேட்டவுடனே அந்த தோரணையை பார்த்த உடனே தானாக கேட்டை திறந்தனர். உள்ளோ போனோம். அப்போது அங்கே முன்னாள் அமைச்சர் ராஜாராமனும், ரஜினிகாந்தும் உள்ளே இருந்தனர். அப்போது ரஜினி காந்த் பேசியது எங்களுக்கு கேட்டது. அவர், ‘அய்யோ அந்தம்மா பாவம் உள்ளே விடுங்கப்பா’’ என அக்காவுக்காக குரல் கொடுத்தார்’’ எனத் தெரிவித்துள்ளார்.  

click me!