இமயமலையிலிருந்து அப்படியே அமெரிக்க போகும் ரஜினி... இந்திய அளவில் உயர்ந்த விஜய்! ஒரே நேரத்தில் உலகநாயகனின் இரண்டு அவதாரங்கள்!

First Published Mar 19, 2018, 3:27 PM IST
Highlights
Rajini to go from the Himalayas to the US Vijay At the same time two incarnations of the worldman


மெர்சல்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். பாஜகவின் மெர்சல் சர்ச்சை தான் அவரை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. படம் வெளியாகி ஐந்து மாதங்கள் ஆன நிலையில், தென்னிந்தியாவின் நம்பர் ஒன் பாக்ஸ் ஆபிஸ் நடிகர் என்ற பெருமை விஜய்க்கு கிடைத்திருக்கிறது.

தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகர்கள் என்றால் ரஜினியும், சிரஞ்சீவியும் இருந்த நிலையில், தற்போது அவர்களை விஜய் பின்னுக்கு தள்ளி முன்னிலைப் முன்னிலையில் இருக்கிறார் தளபதி.

தென்னிந்தியாவிலேயே அதிகம் பேர் பார்த்த டீசராக “மெர்சல்” வந்துள்ளது. இதுவரை இந்த டீசரை சுமார் 38 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். கபாலி தான் இதற்கு முன் இந்த சாதனையை நிகழ்த்தியது. மேலும் பாகுபலி ட்ரைலர் இதைவிட அதிகம் என்றாலும், அதன் மார்க்கெட் வேறு.

எனவே, ஒரு நடிகராக பெரிய ஹிட்ஸ் கொடுத்திருப்பது விஜய் தான் என்பதால், தற்போதைய தென்னிந்திய பாக்ஸ் ஆபிஸ் நம்பர் 1 யார்  என்றால் அது நம்ம ஊரு தளபதி தான்.

இமயமலையிலிருந்து அப்படியே அமெரிக்க போகும் ரஜினி...

இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ள ரஜினி அப்படியே அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழக அரசியல் களத்தில் குதிக்க வந்துவிட்டதால் அவரது மக்கள் மன்றத்திற்கு புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். தனது அரசியல் பயணத்துக்கு தனது குருவிடம் ஆசி பெறுவதற்காக தற்போது இமயமலைக்கு சென்றிருக்கிறார். இமயமலை சுற்றுப் பயணம் முடிந்ததும் அப்படியே அமெரிக்காவுக்கு செல்ல இருக்கிறார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினிக்கு கடும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட மரணத்தின் எல்லைக்கு சென்று திரும்பினார். சிங்கப்பூரில் உள்ள உயர்தர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மறுவாழ்வு பெற்றார்.

அது முதல் அவர் ஆண்டு தோறும் அமெரிக்கா சென்று முழுஉடல் பரிசோதனை செய்து வருகிறார். தற்போது அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள இருக்கிறார்.

இதற்காக அவர் தனது இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா செல்ல இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வருகிறார்கள். இந்த முறை ரஜினியுடன் அவரது மனைவி லதா, இளைய மகள் சவுந்தர்யா ஆகியோர் உடன் செல்கிறார்கள். இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் ரஜினி அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் உலகநாயகனின் இரண்டு அவதாரங்கள்!

ஒரே நேரத்தில் அரசியல் சினிமா என இரண்டிலும் அதகளம் பண்ணப் போறாராம் உலக நாயகன் கமல்ஹாசன்.
கமல்ஹாசன் ஒருபுறம் அரசியல் என்ட்ரியை தொடங்கியிருந்தாலும், மற்றொரு புறம் இந்தியன் 2 படப்பிடிப்பு பணிகளிலும் ஈடுபட இருக்கிறார்.

விஸ்வரூபம் 2′ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இயக்குனர் ஷங்கருடன் ‘இந்தியன் 2′ படத்தில் இணைந்துள்ளார் கமல்.’இந்தியன் 2′ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கவுள்ளது.

தமிழகத்தில் தற்போது சினிமா அரசியல் தலை தூக்கியுள்ளது. ஏற்கெனவே ரஜினிகாந்த் தனது அரசியல் ஆன்மீக அரசியல் என்று அறிவிப்பு வெளியிட்டார். இவரைத் தொடர்ந்து சமீபத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சி கொடி, பெயர், சின்னம் ஆகியவற்றை அறிவித்தார்.

இதையடுத்து, கமல்ஹாசன் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து வருகிறார். இதற…

கமல் சாரிடம் சொல்வது என்னுடைய பொறுப்பு... விஷால் விறுவிறு பதில்...

டிஜிட்டல் நிறுவனங்களின் அதிகக் கட்டணத்தை எதிர்த்து தயாரிப்பாளர்கள் சங்கம் மார்ச் 1ஆம் தேதியிலிருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பு மற்றும் திரைப்படம் சம்பந்தமான அனைத்து நிகழ்வுகளையும் மார்ச் 16ஆம் தேதி முதல் நிறுத்திவைத்துள்ளது.

மார்ச் 23ஆம் தேதியை வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் நடத்திவரும் படப்பிடிப்புகளுக்கு கடைசி தேதியாக அறிவித்துள்ளது. இத்தகைய சூழலில் நடிகர் கமல்ஹாசனை விஷால் நேற்று இரவு சந்தித்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

கமல்ஹாசனுடனான சந்திப்புக்குப் பின்னர் பேசிய விஷால், “சினிமா துறை சார்ந்த முக்கியமான பிரமுகர் கமல். ஸ்டிரைக் என்கிற நிலைமையில் அதுபற்றி கமல் சாரிடம் சொல்வது என்னுடைய பொறுப்பு. என்ன நடக்கிறது...

எதற்காக இந்த ஸ்டிரைக்கை நாங்கள் நடத்துகிறோம் என்று எல்லா விஷயங்களையும் கமல் சாரிடம் நேரில் சென்று சொல்வதுதான் இந்தச் சந்திப்பின் குறிக்கோள். அதனால் நேரில் சென்று கமல் சாரிடம் என்னென்ன விஷயத்துக்காக நாங்க போராடுறோம்.

எந்தெந்த விஷயத்துக்காக சினிமா வேலைகள் நிறுத்தப்பட்டிருக்கிறது என்பது பற்றித் தெளிவாக சொல்லியிருக்கேன். தமிழ் சினிமா பிரச்சினைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுப்பவர் கமல் சார். அதனால் இந்த மாதிரியான சூழலுக்கு அவரோட ஈடுபாடு கண்டிப்பாக இருக்கும்னு நம்புறேன்” என்றார்.

click me!