
தமிழகத்தில் திறமையான அரசியல்வாதிகள் இருந்தும் நிர்வாகம் சீர் கெட்டுப் போயுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை கடந்த 15 ஆம் தேதி முதல் சென்னை ராகவேந்திரா திருமணமண்டபத்தில் சந்தித்து வருகிறார். இன்றுடன் அந்த சந்திப்பு முடிவடைய உள்ள நிலையில் ரசிகர்களிடம் பேசினார்.
அப்போது எனது ரசிகர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என தெரிவித்தார்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நல்ல நிர்வாகி, மிகுவிம் திறமையானவர், ஆனால் அவருக்கு இன்றும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
டாக்டர் அன்புமணி நல்ல அறிவுடையவர். நவீன கருத்துக்களை கூறிவருபவர், உலகம் முழுவதும் சென்று தனது திறமைகளை வளர்த்துக் கொண்டவர் என கூறினார்.
தொல்.திருமாவளவன் தமிழர்களுக்காக தொடர்ந்த போராடி வருபவர்…சீமான் மிகச் சிறந்த போராளி… இப்படி திறமையான அரசியல்வாதிகள் நம்மிடையே இருந்தாலும் நிர்வாகம் என்னவோ சீர்கெட்டுப் போயிருக்கிறது என ரஜினிகாந்த் தெரிவித்தார்.
நான் என்ன பேசினாலும் அது சர்ச்சையாகிவிடுகிறது அல்லது எதிர்ப்பு கிளம்பி விடுகிறது. எதிர்ப்பு இல்லை என்றால் முன்னேறவே முடியாது என தனது எதிர்ப்பாளர்களுக்கு பஞ்ச் வைத்தார்.
நடிகர் ரஜினிகாந்தின் இந்த அதிரடி பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.