
தமிழகத்தில்தான் முதலில் சிஸ்டத்தை தான் சரி செய்ய வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என அனைத்து மக்களையும் நீண்ட வருடங்களாக எதிர்ப்பார்ப்பில் வைத்திருந்த நடிகர் ரஜினி கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி ரசிகர்களை சந்தித்து அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்தார்.
அப்போது பேசிய அவர் சிஸ்டம் சரியில்லை எனவும் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் எனவும் பேசினார்.
இதையடுத்து உடனக்குடன் செயல்பாட்டில் குதித்த ரஜினி ரசிகர்கள் மூலம் இணையதளம், சின்னம் என தேர்வு செய்து அதிரடி கிளப்பினார்.
இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரஜினி, அரசியல் தெரியாதவர்கள்தான் அவசரப்படுவார்கள் எனவும் எனக்கு நன்கு அரசியல் தெரிந்ததால் தான் நிதானமாக முடிவெடுக்கிறேன் எனவும் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து ரஜினிகாந்த் கடந்த புத்தாண்டு அன்று இணையத்தில் ரஜினி மக்கள் மன்றத்தை தொடங்கினார். இதில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும் அவர் தனது ரஜினி ரசிகர் மன்றத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் சிஸ்டம் சரியில்லை என்றால் இந்தியாவிலா அல்லது தமிழகத்திலா என்று ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், தமிழகத்தில்தான் சிஸ்டம் சரியில்லை. தமிழகத்தில்தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் எனவும் கமலுடன் இணைந்து பணியாற்றுவது என்பது காலம்தான் பதில் சொல்லும் என்றும் தெரிவித்தார்.