ரசிகர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை..! ரஜினி கூறியதும்..! ஊடகங்கள் திரித்ததும்..! உண்மை இது தான்..!

By Selva KathirFirst Published Feb 26, 2020, 3:05 PM IST
Highlights

தூத்துக்குடிக்கு தான் வருகை தந்தால் ரசிகர்கள் அதிக அளவில் கூடி சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும என்று ரஜினி தரப்பில் விசாரணை ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படும் தகவல் குறித்த உண்மையை விளக்குகிறது இந்த கட்டுரை.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்த ரஜினி அவர்களுக்கு நிவாரண உதவியும் செய்து வந்தார். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் பேசிய ரஜினி, தூத்துக்குடி மக்கள் நியாயமாக போராடியதாகவும் சில சமூக விரோதிகள் ஊடுறுவியதே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் என்று பேட்டி அளித்தார். அப்படி என்றால் அந்த சமூக விரோதிகள் யார் என்று ரஜினி கூற வேண்டும் என்று விசாரணை ஆணையத்தில் சிலர் மனு அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்தவே ரஜினிக்கு அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியது. ஆனால் சம்மனை பெற்றுக் கொண்ட ரஜினி தன்னால் நேரில் ஆஜராக முடியாது என்றும் தனக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரி ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் தான், தான் தூத்துக்குடி வந்தால் தன்னை பார்க்க ரசிகர்கள் கூடுவார்கள் என்றும் எனவே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று ரஜினி கூறியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டனர்.

மேலும் ரஜினி தன்னுடைய ரசிகர்கள் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவார்கள் என்று கூறியதாகவும் ரஜினி எதிர்ப்பு ஊடகங்கள் செய்தியை திரித்து வெளியிட ஆரம்பித்தன. மேலும் ரஜினி இப்படி தனது ரசிகர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறியது பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று சில அரைவேக்காடு செய்தியாளர்கள் வேல்முருகன், ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்களும் ரஜினி என்ன கூறினால் என்பதை முழுவதும் தெரிந்து கொள்ளாமல் பதில் அளித்தனர். இதனால் ரஜினி தனது ரசிகர்களால் தனக்கு பிரச்சனை ஏற்படும் என்றும் தொந்தரவு ஏற்படும் என்றும் கூறிவிட்டதாக அவருக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரஜினி சார்பில அவரது வழக்கறிஞர் தூத்துக்குடியில் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அவர் ரஜினி நேரில் ஆஜராக முடியாததற்கான காரணத்தை விளக்கியதை தொடர்ந்து அவர் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டது. அத்துடன் ஆணையம் சார்பில் சில கேள்விகளுக்கு ரஜினியிடம் விளக்கம் கேட்டு அதற்கான ஆவணம் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினி வழக்கறிஞரிடம், உண்மையில் ரஜினி தனது ரசிகர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று ஆணையத்திடம் கூறியுள்ளாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரஜினி அப்படி கூறவில்லை என்று வழக்கறிஞர் கூறிவிட்டு சென்றார். மேலும் ரஜினி கூறியது தான் தூத்துக்குடிக்கு வந்தால் தன்னை காண கூட்டம் அதிகம் கூடும் இதனால் விசாரணை ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு சில அசவுகரியங்கள் ஏற்படும் என்றே கூறியதாகவும் சட்டம் ஒழுங்கு குறித்து தங்கள் கடிதத்தில் தாங்கள் எதையும் கூறவில்லை என்று ரஜினி வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.

click me!