'இந்தியாவின் ஆன்மாவை மறக்க வேண்டாம்..! டெல்லி மக்களிடம் உருகிய பிரதமர் மோடி..!

By Manikandan S R SFirst Published Feb 26, 2020, 2:50 PM IST
Highlights

அமைதியும், சமூக நல்லிணக்கமும் நமது நெறிமுறைகளில் மையமானதாக இருக்கும் நிலையில் அமைதியையும், சகோதரத்துவத்தையும் பேணுமாறு டெல்லியில் இருக்கும் தனது சகோதர, சகோதரிகளிடம் வேண்டுகோள் விடுப்பதாக பிரதமர் கூறியுள்ளார். மேலும் தற்போதைய சூழலிில் அமைதி காப்பது முக்கியமாகும். அப்போதுதான் இயல்புநிலையை விரைவில் மீட்டெடுக்க முடியும் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மத்தியில் தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வன்முறை வெடித்துள்ளது. இப்ப்போராட்டத்தில் இதுவரையிலும் 20 பேர் பலியாகி இருக்கின்றனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பல்வேறு இடங்களில் வன்முறையாளர்கள் பொதுச்சொத்துக்களை சூறையாடி இருக்கின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

4 வயது மகளுடன் மாடியிலிருந்து குதித்த தந்தை..! உடல்சிதறி ரத்தவெள்ளத்தில் பலி..!

டெல்லியில் நடக்கும் வன்முறையை மத்திய உள்துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர டெல்லி அரசுடன் இணைந்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வன்முறையை ஒடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம்  அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் தெரிவித்துள்ளார். இதனிடையே டெல்லி மக்கள் அமைதி காக்க வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Peace and harmony are central to our ethos. I appeal to my sisters and brothers of Delhi to maintain peace and brotherhood at all times. It is important that there is calm and normalcy is restored at the earliest.

— Narendra Modi (@narendramodi)

 

இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் நிலைமை குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டிருப்பதாகவும் காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து அமைதி மற்றும் இயல்பு நிலையை உறுதிபடுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். அமைதியும், சமூக நல்லிணக்கமும் நமது நெறிமுறைகளில் மையமானதாக இருக்கும் நிலையில் அமைதியையும், சகோதரத்துவத்தையும் பேணுமாறு டெல்லியில் இருக்கும் தனது சகோதர, சகோதரிகளிடம் வேண்டுகோள் விடுப்பதாக பிரதமர் கூறியுள்ளார். மேலும் தற்போதைய சூழலிில் அமைதி காப்பது முக்கியமாகும். அப்போதுதான் இயல்புநிலையை விரைவில் மீட்டெடுக்க முடியும் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

click me!