ஓட்டுபோட்ட மக்களுக்கே விருது கொடுத்த எம்எல்ஏ..!! மத வெறிக்கு அன்சாரி கொடுத்த சவுக்கடி...!!

Published : Feb 26, 2020, 02:50 PM IST
ஓட்டுபோட்ட மக்களுக்கே விருது கொடுத்த எம்எல்ஏ..!!  மத வெறிக்கு அன்சாரி கொடுத்த சவுக்கடி...!!

சுருக்கம்

நாட்டிலேயே தலைசிறந்த சட்டமன்ற  உறுப்பினர் என்பதை அங்கிகரித்து புனே அமைதி பல்கலைகழகம் வழங்கிய முன்மாதிரி எம்எல்ஏ என்ற விருதை , தனது தொகுதியைச் சேர்ந்த  தொழிலாளர்களிடம் நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி வழங்கினார்.  

நாட்டிலேயே தலைசிறந்த சட்டமன்ற  உறுப்பினர் என்பதை அங்கிகரித்து புனே அமைதி பல்கலைகழகம் வழங்கிய முன்மாதிரி எம்எல்ஏ என்ற விருதை , தனது தொகுதியைச் சேர்ந்த  தொழிலாளர்களிடம் நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி வழங்கினார்.  மூன்று மத குருக்கள் முன்னிலையில் விருதை ஒப்படைத்தார். 

புனே MIT கல்வி நிறுவனங்களின் அமைப்பான புனே அமைதி பல்கலைக்கழகம்,  மஜக பொதுச் செயலாளரும், நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான  தமிமுன் அன்சாரி அவர்களை  முன்மாதிரி இளம் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்து,  கடந்த  22 ஆம் தேதி  டெல்லியில் நடந்த விழாவில் விருது வழங்கி கவுரவித்தது . இந்நிலையில் தொகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வருகை தந்து சட்டமன்ற உறுப்பினர் அன்சாரியை பாராட்டினர்.  அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், இந்த விருதை தொகுதி மக்களுக்கும், மனிதநேய ஜனநாயக கட்சியின் தொண்டர்களுக்கும் சமர்ப்பிப்பதாக அறிவித்தார் . 

அப்போது மஞ்சக் கொல்லை கோயில் குரு அசோகன்,  நாகூர் தர்ஹா குடும்பத்தை சேர்ந்த செய்யது மீரான்,  நாகை  பாதிரியார் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் ,  நாகையில் வசிக்கும்  ரிக்ஷா தொழிலாளிகளிடம்  தான் பெற்ற  விருதை ஒப்படைத்தார் அன்சாரி. இன்று சட்டமன்ற உறுப்பினர்  அலுவலகத்திற்கு ரயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கர்,  இன்ஜினியர் அசோசியேசன், மாணவர் முன்னணி, இளைஞர் பாசறை மற்றும் பல தொண்டு அமைப்புகள், ஜமாத்தினர், தமிழ் அமைப்புகள்  வருகை தந்து அவருக்கு வாழ்த்து கூறினர்.  அதிமுக, திமுகவை சேர்ந்த உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளும் வருகை தந்து வாழ்த்து தெரிவித்தனர். 


 

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!