ரஜினி மகள் திருமணத்திற்கு பெரியார்தான் காரணம்... செல்லூர் ராஜூ அதிர்ச்சிப் பேச்சு..!

Published : Jan 23, 2020, 02:56 PM IST
ரஜினி மகள் திருமணத்திற்கு பெரியார்தான் காரணம்... செல்லூர் ராஜூ அதிர்ச்சிப் பேச்சு..!

சுருக்கம்

ரஜினி தனது இரண்டாவது மகளுக்கு எப்படி மறுமணம் செய்து வைத்தார். பெரியார் தான் அதற்கு காரணம் என்பதை ரஜினிகாந்த் மறந்துவிடக்கூடாது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

ரஜினி தனது இரண்டாவது மகளுக்கு எப்படி மறுமணம் செய்து வைத்தார். பெரியார் தான் அதற்கு காரணம் என்பதை ரஜினிகாந்த் மறந்துவிடக்கூடாது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

பெரியார் குறித்த ரஜினியின் பேச்சு கடந்த மூன்று தினங்களாக தமிழகத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. அவரது பேச்சுக்கு திக- திமுக ஆகிய கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில் அதிமுக அமைச்சர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையல், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘’இன்று பெண்கள் ஊராட்சித் தலைவர்களாக அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் அதற்கு காரணம் பெரியார். பெரியாரை பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மறக்க கூடாது.

ராஜீவ்காந்தியை கிராமத்தில் இருப்பவர்கள் மறக்க கூடாது. கிராம ராஜ்யம் கொண்டு வந்தவர் ராஜீவ்காந்தி தான். இந்த நாட்டுக்காக சேவை ஆற்றியவர்களில் கருணாநிதிக்கும் பங்கு உண்டு. அதை என்னால் மறுக்க முடியாது. எது நடந்தாலும் உடனே வாட்ஸ் ஆப்பில் வந்துவிடுகிறது. எனவே ஊராட்சித் தலைவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ரஜினி தனது இரண்டாவது மகளுக்கு எப்படி மறுமணம் செய்து வைத்தார். பெரியார் தான் அதற்கு காரணம் என்பதை மறக்க கூடாது. பொறுமையாக பேசும் ரஜினியை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள்’’என அவர் தெரிவித்தார். 


 

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!