ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு... ரசிகர்களை ஏமாற்றினாரா..? என்ன செய்தார் ரஜினி..?

By Thiraviaraj RMFirst Published Jul 14, 2021, 2:50 PM IST
Highlights

சச்சினுக்கு பிறகு நான் எந்த ஒரு மேட்சும் முழுசா பார்த்ததில்லை. அது போல தான், தலைவரை தவிர மற்ற யாருக்கும் நான் ரசிகனில்லை.

தான் அரசியலில் ஈடுபடவில்லை ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாக ரஜினிகாந்த் ஓரிரு நாட்களுக்கு முன்  செய்தியாளர்கள் மத்தியில் விளக்கி இருந்தார். இந்நிலையில் அவர் அரசியலுக்கு வருவதாக கூறியவரை அவரை கொண்டாடிய ரசிகர்கள், ரஜினி அரசியல் இனி இல்லை என அறிவித்தவுடன் அவரை விட்டு விலகுவதாகும், பிற நடிகர்களின்  ரஜினிகர்கள் ரசிகர்களை விமசிப்பதாகவும் கூறப்படுகின்றன.

இந்நிலையில் ரஜினி ரசிகர் ஒருவர் ரஜினியை ஏன் பிடிக்கும் என கருத்து தெரிவித்துள்ளார். ‘’நானும், ரஜினி, ரஜினின்னு கொண்டாடுனவன் தான். ரஜினி ரசிகன்னு திமிரா இருந்தவன்தான். ஆனா ரஜினியின் உண்மை முகம் இப்போ தான் தெரியுது. நான் திருந்திட்டேன். நீயும் திருந்துடா... அவர் உனக்கு என்ன செய்தார்?" சில நாட்களாக ஒரு சிலர் எனக்கு கூறும் அறிவுரை. 

அவர்களுக்கு  எனது பதில்.:-’’ரஜினி எனக்கு என்ன செய்தார்.? நான்கு வயதில் எனது மனதை கவர்ந்தவர் அவர். ஆன்மீக பக்தியை எனக்கு கற்றுக் கொடுத்தார். தோல்வியின் போது நிதானத்தையும், வெற்றியின் போது எளிமையையும், துக்கத்தின் போது மனம் தளராமையையும், விமர்சனங்களின் போது அமைதியையும் எனக்கு அவர்தான் கற்றுக் கொடுத்தார்.

படத்தில் தாய்ப்பாசம் மிக்கவராய் நடிப்பது மட்டுமல்லாமல் தனது தாயாய் நடித்த பண்டரி பாய் அம்மையாருக்கு கடைசி காலத்தில் மருத்துவ செலவை ஏற்று தாய்ப்பாசத்தை புரிய வைத்தார். எதிரியை கூட நம்பலாம். நேசிக்கவில்லை. தலைவரை உண்மையாக நேசிக்கும் எவரும் தரங்கெட்டு போனதில்லை. நானும் ரஜினி ரஜினின்னு கொண்டாடுனயையும், விமர்சனங்களின் போது அமைதியையும், எனக்கு அவர்தான் கற்றுக் கொடுத்தார். படத்தில் தாய்ப்பாசம் மிக்கவராய் நடிப்பது மட்டுமல்லாமல் தனது தாயாய் நடித்த பண்டரி பாய் அம்மையாருக்கு கடைசி காலத்தில் மருத்துவ செலவை ஏற்று தாய்ப்பாசத்தை புரிய வைத்தார்.

தன்மானம் காப்பவனே உண்மையான மனிதன் என்பதை அவர் உணர்த்தியுள்ளார். நன்றி மறவாமை முதல், கெடுதல் செய்தவருக்கு நன்மை செய்தல் வரை எத்தனையோ நல்ல விசயங்களை அவர் கற்று கொடுத்துள்ளார். என்ன கஷ்டம் வந்தாலும் சமாளிக்கும் திறனை கற்றுக் கொடுத்துள்ளார். உனக்கு ரஜினி ஒன்றும் செய்யவில்லை.

ஏனெனில் நீ அவரை உண்மையாக நேசிக்கவில்லை. தலைவரை உண்மையாக நேசிக்கும் எவரும் தரங்கெட்டு போனதில்லை. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட். எல்லாவற்றுக்கும் மேலாக கிடைப்பதற்கரிய வைரமான தலைவரின் சொந்தங்களையும் அதன் மூலம் அண்ணன் தம்பிகள் என்ற பல வைடூரியங்களையும் எனக்கு என் தலைவர் கொடுத்துவிட்டார்.

இதுக்கு மேல் அவரு என்ன செய்யனும். "பெத்தவங்கள மொதல்ல பாருடா. அப்புறம் ரஜினிய பாக்கலாம்.." டேய்.. அப்பன் ஆத்தாவ மதிக்கிறதுக்கு ரஜினி ரசிகர்களுக்கு நீங்க யாரும் சொல்லி கொடுக்க தேவையில்ல. பெத்தவங்கள மதிக்காதவனுக்கு அவரு பேர சொல்ல கூட தகுதியில்லை. சச்சினுக்கு பிறகு நான் எந்த ஒரு மேட்சும் முழுசா பார்த்ததில்லை. அது போல தான், தலைவரை தவிர மற்ற யாருக்கும் நான் ரசிகனில்லை. பச்சோந்தி தான் அடிக்கடி நிறம் மாறும். நான் மாற மாட்டேன்’’ என தெரிவித்துள்ளார்.
 

click me!