திருப்பதிக்கு இணையாக தமிழக கோவில்கள்.. ஆச்சரியத்தில் தமிழக மக்கள்.. தெறிக்கவிட்ட அமைச்சர் சேகர் பாபு.

By Ezhilarasan BabuFirst Published Jul 14, 2021, 1:35 PM IST
Highlights

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கோவில்களில் வரவு செலவு கணக்கை இணையதளத்தில் வெளியிடுவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். 

தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள் அனைத்தும்  திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு இணையாக மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதுகுறித்து துறை சார்பில் சிறப்பு கூட்டம்  வரும் 17 ஆம் தேதி நடைபெறும் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ள வாசுதேவ பெருமாள் கோவில் வலாகத்தை இன்று அமைச்சர் பார்வையிட்டார். அவருடன் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். 

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கோவில்களில் வரவு செலவு கணக்கை இணையதளத்தில் வெளியிடுவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். அதேபோல் முகநூலில் வாசுதேவ பெருமாள் கோவில் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து செய்தி பரவுவதாக தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எனது கவனத்திற்கு கொண்டு வந்தார். உடனே அதனடிப்படையில் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளோம். அடுத்த இரு தினங்களில் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்படும் என அவர் கூறினார். தமிழக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக அறநிலைத்துறை கோரிக்கைகளை பதிவிடுங்கள் என்ற இணையதளத்தில் இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் அதேபோல் மனுவாக 30,000 கோரிக்கைகள் வந்து இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

உடனே அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்னும் ஓராண்டு காலத்திற்குள் இந்து சமய அறநிலையத் துறையின் நடவடிக்கைகள் அனைத்தையும் மக்களை அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படைத் தன்மை மிக்கதாக  முழுமையாக மாற்றி அமைக்கப்படும் என கூறினார். தமிழகத்திலுள்ள திருச்செந்தூர், பழனி, மதுரை மீனாட்சி அம்மன் போன்ற முக்கிய கோவில்கள்  திருப்பதிக்கு இணையாக மாற்றப்படும் என்றும் அவர் உறுதிபட கூறினார்.

 

click me!