நான் தமிழக பாஜகவின் தலைவர் அல்ல... அட்ராசிட்டியை ஆரம்பித்த அண்ணாமலை...!

Published : Jul 14, 2021, 01:36 PM IST
நான் தமிழக பாஜகவின் தலைவர் அல்ல... அட்ராசிட்டியை ஆரம்பித்த அண்ணாமலை...!

சுருக்கம்

ஒருபக்கம் இளமையானவர்களும், மற்றொரு பக்கம் அனுபவமுள்ளவர்களும் கட்சிக்குள் இருப்பார்கள். மற்ற கட்சிகளில், குடும்பத்தில் இருப்பவர்களே பொறுப்புக்கு வருவார்கள். 

தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக வளரும். பாஜகவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலர், தேசிய அளவில் பொறுப்பில் இருக்கின்றனர் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இதனையடுத்து, பாஜக மாநிலத் துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டதையடுத்து 16ம் தேதி பொறுப்பேற்கிறார். அதற்காக, இன்று கோவையில் இருந்து சாலை மார்க்கமாக சென்னை புறப்பட்டார். கோவையில் அண்ணாமலைக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதனையடுத்து, அவிநாசி தண்டுமாரியம்மன் கோவிலில் அண்ணாமலை சிறப்பு பூஜை செய்து தரிசனம் மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களுளக்கு பேட்டியளித்த அண்ணாமலை;- தமிழக பாஜகவில் இருந்து பல பேருக்கு அகில இந்திய பொறுப்புகள் வழங்கப்படுகிறது. அதேபோல் ஒருபக்கம் இளமையானவர்களும், மற்றொரு பக்கம் அனுபவமுள்ளவர்களும் கட்சிக்குள் இருப்பார்கள். மற்ற கட்சிகளில், குடும்பத்தில் இருப்பவர்களே பொறுப்புக்கு வருவார்கள். 

பாஜகவை பொறுத்தவரை மாநிலத் தலைவர் என்ற பொறுப்பு அனைவரையும் இணைத்து அழைத்துச் செல்லும் ஒரு பொறுப்பாகத்தான் பார்க்கிறேன். இதில் வயது என்பது முக்கியம் கிடையாது. இது ஒரு கூட்டு முயற்சி. இது தனிமனித கட்சி கிடையாது. நான் தமிழக பாஜக கட்சியின் தலைவர் அல்ல, சேவகன். மத்திய அரசின் திட்டங்களை ஒவ்வொரு கிராமமும், ஒவ்வொரு வீடாகவும் கொண்டு செல்வோம். கிராமங்களை நோக்கி எங்களின் திட்டங்களை எடுத்து செல்வோம் என தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!