நடிகர் ரஜினிகாந்த் எப்போ கட்சி தொடங்கப் போறார் தெரியுமா ? அவரின் அண்ணனே வெளியிட்ட தகவல் !!

Published : Dec 12, 2019, 06:15 AM IST
நடிகர் ரஜினிகாந்த் எப்போ கட்சி தொடங்கப் போறார் தெரியுமா ? அவரின் அண்ணனே வெளியிட்ட தகவல் !!

சுருக்கம்

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடிகர் ரஜினிகாந்த்  கட்சி  தொடங்க உள்ளதாகவும், தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து  பொது மக்களை சந்திக்க உள்ளதாகவும் அவரின் சகோதரர் சத்தியநாராயணராவ் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம்  அவிநாசியில் நடிகர் ரஜினிகாந்த்  பிறந்தநாளை முன்னிட்டு 12 ஜோடிகளுக்கான இலவச திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சத்தியநாராயணராவ் வந்திருந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ரஜினி அடுத்தாண்டு ஏப்ரலில் கட்சி துவங்குவது பற்றி உறுதியான அறிவிப்பு வெளியாகும். அதற்கான திட்ட வடிவமும் செயல் வடிவமும் தயார்நிலையில் உள்ளது. 

ரஜினி தனித்தே கட்சி துவங்குவார் யாரையும் சார்ந்திருக்க மாட்டார். ஒரு சிலர் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பார் என்று கூறி வருகின்றனர். அது தவறு. திராவிட கட்சிகளுக்கும் ஆதரவாக இருக்கமாட்டார் . நட்பு ரீதியாக பல கட்சியினர் ரஜினிகாந்தை சந்தித்து வருகின்றனர் என்றும் சத்தியநாராயணராவ் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி