எத்தனை ஒரு முக்கியமான நாள் தெரியுமா ? இது சகோதரத்துவத்துகான நாள் !! மோடி பெருமிதம் !!

By Selvanayagam PFirst Published Dec 11, 2019, 10:41 PM IST
Highlights

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதையடுத்து சகோதரத்துவத்திற்கான முக்கியமான நாள்  இது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று  மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 125 எம்.பி.,க்களும்,  மசோதாவுக்கு எதிராக 105 எம்.பி.,க்களும் வாக்களித்தனர்.

 இருஅவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

இந்நிலையில், இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. 

பல ஆண்டுகளாக துன்புறுத்தல்களை எதிர்கொண்ட பலரின் பாதிப்பை இந்த மசோதா தணிக்கும். மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து எம்.பி.க்களுக்கும் நன்றி. நமது தேசத்தின் கருணை மற்றும் சகோதரத்துவத்திற்கான முக்கியமான நாள் ஆகும் என பதிவிட்டுள்ளார்.

click me!