நான் போட்ட புள்ளி சுழலத் தொடங்கிவிட்டது... அது அரசியல் சுனாமியாக மாறும்... ரஜினியின் தாறுமாறு கணிப்பு!

By Asianet TamilFirst Published Mar 16, 2020, 9:44 PM IST
Highlights

 எப்போதும் அலை வந்தால்தான் ஓர் எழுச்சி வரும். எம்.ஜி.ஆர். சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தார். கருணாநிதி முதல்வராக ஆனதில் எம்.ஜி.ஆரின் பங்கு மிக முக்கியமானது. திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். தூக்கி எறியப்பட்டதால் அனுதாப அலை ஏற்பட்டது. அதனால், எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். 1991-ல் ராஜிவ் காந்தி படுகொலை நடந்த நேரத்தில் திமுகவுக்கு எதிரான அலை ஏற்பட்டது. அதனால்தான் ஜெயலலிதா முதல்வர் ஆனார்.
 

அரசியலில் நான் போட்ட புள்ளி, தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் சுனாமியாக மாறும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு பிறகு ரஜினி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது  அவர் கூறுகையில்,  “கக்கனின் இன்னோரு உருவம்தான் நல்லக்கண்ணு. அவரை நான் அப்படிதான் பார்க்கிறேன். குமரி அனந்தன், இல.கணேசனுக்கு விருது வழங்கியது சிறப்பு. எப்போதும் அலை வந்தால்தான் ஓர் எழுச்சி வரும். எம்.ஜி.ஆர். சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தார். கருணாநிதி முதல்வராக ஆனதில் எம்.ஜி.ஆரின் பங்கு மிக முக்கியமானது. திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். தூக்கி எறியப்பட்டதால் அனுதாப அலை ஏற்பட்டது. அதனால், எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். 1991-ல் ராஜிவ் காந்தி படுகொலை நடந்த நேரத்தில் திமுகவுக்கு எதிரான அலை ஏற்பட்டது. அதனால்தான் ஜெயலலிதா முதல்வர் ஆனார்.


அரசியலில் நான் போட்ட புள்ளி, தற்போது ஒரு சுழலாக உருவாகியுள்ளது. இதை மக்கள் மத்தியில் தடுக்க முடியாது. அது வலுவான அலையாக மாற வேண்டும். தேர்தல் நெருங்க நெருங்க அது அரசியல் சுனாமியாக மாறும். இது ஆண்டவன் கையில் இருக்கிறது. அது மக்களிடமும் இருக்கிறது. அப்போது அரசியல் அற்புதம் நிகழும்” என்று ரஜினி தெரிவித்தார். கடந்த வாரம் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ரஜினி, “தான் முதல்வராகப் போவதில்லை. ஆட்சி வேறு; கட்சி வேறு. இப்போது இல்லாவிட்டால் எப்போதும் இல்லை; எழுச்சி ஏற்பட்டவுடன் அரசியலுக்கு வருவேன்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

click me!