ரஜினியும் கமலும் இப்பதான்...! நான் அப்பவே...! நினைவலைகளை புரட்டி போட்ட விஜயகாந்த்...! 

 
Published : Jan 21, 2018, 06:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
ரஜினியும் கமலும் இப்பதான்...! நான் அப்பவே...! நினைவலைகளை புரட்டி போட்ட விஜயகாந்த்...! 

சுருக்கம்

Rajini and Kamal are the Juniors and I am their senior

அரசியலில் ரஜினியும் கமலும் எனக்கு ஜூனியர்தான் எனவும் நான்தான் அவர்களுக்கு சீனியர் எனவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

ரஜினியின் அரசியல்

1990 களில் ரஜினி நடித்த சில படங்களிலும் பாடல்களிலும் அரசியல் குறித்த பார்வை வெளிப்பட்டது. ஆனால் வெளிப்படையாக அரசியலை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை ரஜினி. 

இதைதொடர்ந்து 1996 ஆம் ஆண்டு ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவை எதிர்த்து பேசி வந்தார். இதனால் அதிமுக அப்போது தோல்வியுற ரஜினியே காரணம் என அனைவராலும் பேசப்பட்டது. 

ஆனால் அடுத்தடுத்து தேர்தல்களில் அரசியல் குறித்தும் எந்தவொரு கட்சிக்கும் சப்போர்ட் செய்தும் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ பேசவில்லை. 

இதையடுத்து 2004 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வாக்களித்ததாக வெளிப்படையாக அறிவித்தார். இதனால் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என ரசிகர்களால் பரப்பப்பட்டது. 

ரஜினிகாந்த் 2008 நவம்பர் 3 அன்று ரசிகர்களை சந்தித்து பேசினார்.  அவரின் அரசியல் வருகை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது, எந்திரன் படத்திற்கு பிறகு முடிவு அறிவிப்பதாகக் கூறினார். லிங்கா பட இசை வெளியீட்டின் போதும் "அரசியலுக்கு வர வேண்டும் என இருந்தால் வருவேன்" என தெரிவித்தார். 

இந்நிலையில் ரஜினிகாந்த் 2017 டிசம்பர் 31 அன்று அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 234 தொகுதிகளில் தனித்து போட்டி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கமலின் அரசியல்

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் அவ்வபோது ஆளுங்கட்சியான எடப்பாடி ஆட்சியை விமர்சித்து வந்தார். இதற்கு அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். 

ஆனால் நடிகர் கமல் அதற்கு பதிலுக்கு பதில் பதிலடி கொடுத்து வந்தார். இவை அனைத்தையும் தமது டுவிட்டர் மூலமே பரப்பி வந்தார். அதற்கும் மீடியாக்கள் செவி சாய்த்தன. 

இதையடுத்து அவர் களத்தில் இறங்கட்டும் அப்புறம் பேசட்டும் என அமைச்சர்கள் ஏவி விட்டனர். அதே போல் தாம் அரசியலுக்கு வருவது உறுதி என நடிகர் கமல் தெரிவித்தார். 

இந்நிலையில் இடையிடையே காணமல் போவதால் பல விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வரும் ஜனவரி 26-ந் தேதி முதல் தீவிர அரசியலில் குதிக்க போவதாக தெரிவித்துள்ளார். 

விஜயகாந்த் அரசியல்

1993 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தினர் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். அவர்களில் பலர் வெற்றிபெற்றனர். இப்பின்புலத்தில் விஜயகாந்த் தானும் அரசியலில் ஈடுபடுவது என முடிவு செய்தார். 

2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார்.

2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றி்னார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 இரிஷிவந்தியம் தொகுதியிலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவரது கட்சிக்கு எதிர்க்கட்சித் தகுதி கிடைத்தது. 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

சீனியர் - ஜுனியர்

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த் அரசியலில் ரஜினியும் கமலும் எனக்கு ஜூனியர்தான் எனவும் நான்தான் அவர்களுக்கு சீனியர் எனவும் தெரிவித்துள்ளார். 


 

PREV
click me!

Recommended Stories

அண்ணாமலை என்ற நாயின் வாலை நிமிர்த்த முடியாது.. நான் மோடிக்கு விசுவாசமானவன்.. திடீரென பொங்கிய அண்ணாமலை
தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!