அ.தி.மு.க. இல்லைனா அண்ணா என்ற வரலாறே இல்லாமல் போயிருக்கும்... சர்ச்சையில் சிக்கிய செல்லூர் ராஜூ!

First Published Jan 21, 2018, 5:45 PM IST
Highlights
sellur raju explain about Annadurai history


அ.தி.மு.க. என்ற கட்சி தொடங்கப்படாமல் இருந்திருந்தால் அண்ணா என்ற ஒருவர் பிறந்தார் என்ற வரலாறே தெரியாமல் போயிருக்கும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். 

சமூக வலைதளங்களில் எப்போதுமே மாசாக இருப்பவர் கேப்டன் விஜயகாந்த் அவர் என்ன பேசினாலும் டிரெண்டிங் தான் த்தூ... தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க இப்படி என்ன பேசினாலும் வலைதளங்களில் பெமசாகிவந்த நிலையில், அதிமுகவில் ஒருவர் செய்யும் செயலும், அவரின் பேச்சும் வலைதலவாசிகளுக்கு மீம்ஸ் போடா ஐடியாக்களை தீனி போட்டு வருகிறார்.

தமிழக முதல்வர் பேருந்து கட்டணத்தை மனமுவந்து ஏற்றவில்லை. பணவீக்க காலத்தில் ரூ.1 பிச்சை போட்டால் பிச்சைக்காரர்கள் கூட வாங்கமாட்டார்கள் என பேசியது மக்கள் மத்தியில் பெரும் எரிச்சலை உண்டாக்கியது.

இந்நிலையில் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் அக்கட்சி சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரையில் நடந்த விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பேசினார்.  அவர் பேசுகையில், ’‘எம்.ஜி.ஆர்., தான் தொடங்கிய கட்சியின் கொடியில் தனது தலைவரான பேரறிஞர் அண்ணாவின் உருவப்படத்தைப் பொறித்தார்.

தான் ஏற்றுக்கொண்ட தலைவனின் உருவத்துடன் கூடிய கொடியைக் கொண்ட ஒரே இயக்கம் அ.தி.மு.கதான். வேறெந்த கட்சிக்கும் அந்த சிறப்பு இல்லை. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மட்டும் அதிமுகவைத் தொடங்காமல் இருந்திருந்தால், அண்ணா என்ற ஒருவர் பிறந்தார் என்ற வரலாறே தெரியாமல் போயிருக்கும்’’ என்று பேசினார். அமைச்சர் தான் கூறும் கருத்துகளால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் இந்தமுறை அண்ணா குறித்து  பேசி பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

click me!