ரஜினியின் அடுத்த புதிர் ரெடி! தமிழருவி மணியனின் ஆலோசனையால் பரபரப்பு!

 
Published : Dec 22, 2017, 03:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
ரஜினியின் அடுத்த புதிர் ரெடி! தமிழருவி மணியனின் ஆலோசனையால் பரபரப்பு!

சுருக்கம்

Rajini - Tamilnadu Manian Meeting

நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதம் 15 மாவட்ட ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது ரசிகர்களிடையே பேசிய ரஜினி அரசியலுக்கு வரத் தயாராகிவிட்டதை அறிவித்தார். ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, சிஸ்டம் சரியில்லை என்று கூறியிருந்தார். மேலும், போருக்கு தயாராகுங்கள் என்றும் ரஜினி தெரிவித்திருந்தார்.

ரஜினியின் இந்த பேச்சு அப்போதிலிருந்து பெரும் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. ரஜினிக்கு எதிராக அமைச்சர்கள் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து சில சந்தேகங்கள் தொடர்ந்தன.

இந்த நிலையில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில், தமிழருவி மணியன், ஒரு பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்துக்கு யாருமே எதிர்பாராத வகையில் பெருந்திரளாக மக்கள் குழுமினர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. வரும் 26 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை ரசிகர்கள் சந்திப்பு இருக்கும் என்றும், அப்போது, அரசியல் களத்தில் ரஜினி அடியெடுத்து வைக்கப்போகும் செய்தியை அறிவிப்பார் என்று தமிழருவி மணியன், சென்ற வாரம் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் தமிழருவி மணியன் சந்தித்து
பேசியுள்ளார். பேச்சு விவரம் குறித்து தற்போது ஏதும் வெளியாகவில்லை.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!