ராஜேந்திர பாலாஜி பேட்டியால் ஷாக்கான அதிமுக... பட்டப்பகலில் பச்சை பச்சையாய் புளுகும் பயங்கரம்!!

By sathish kFirst Published Apr 28, 2019, 7:31 PM IST
Highlights

ஓட்டப்பிடாரம்  இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் 70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக  ராஜேந்திர பாலாஜி கூறியதால் அதிமுக அதிர்ச்சியில் உள்ளதாம். 

ஓட்டப்பிடாரம்  இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் 70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக  ராஜேந்திர பாலாஜி கூறியதால் அதிமுக அதிர்ச்சியில் உள்ளதாம். 

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி நடைபெறும் 7ஆம் கட்ட மக்களவைத் தேர்தலின்போது இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  இதில் ஓட்டப்பிடாரத்தில் அதிமுக சார்பில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மோகன் போட்டியிடுகிறார். இதையொட்டி அங்கு அதிமுக சார்பில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை அமைச்சர்கள் காமராஜ் மற்றும் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஓட்டப்பிடாரம் தொகுதி ஏற்கெனவே அதிமுகவின் வெற்றிக்கோட்டையாக இருந்து வருகிறது. ஜெயலலிதாவுடைய இரும்புக்கோட்டையாகவும்,   பழனிசாமியின் எஃகு கோட்டையாகவும் இருக்கிறது. இத்தொகுதியில் போட்டியிடும் திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் டெபாசிட் இழக்கும். 

திமுகவுக்கு என்று இத்தொகுதியில் வாக்கு வங்கியும் இல்லை; களப்பணியாற்ற தொண்டர்களும் இல்லை. அதிமுக மற்றும் புதிய தமிழகம் நிர்வாகிகள்தான் இங்கு அதிகளவில் இருக்கிறார்கள். எங்கள் கூட்டணியில் இருக்கிற தேமுதிகவினரும் இங்கு உள்ளனர். பலமான கூட்டணியாக இருக்கிற அதிமுக வேட்பாளர் மோகன் 70 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது” என்றார்.

ஓட்டப்பிடாரம் தொகுதியின் மொத்த வாக்காளர்களே 2 லட்சத்து 27 ஆயிரமாக உள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் 70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

click me!