காங்கிரஸில் அப்பா... பாஜகவில் மகன்... அம்பானியின் ராஜதந்திரம்...! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

By Thiraviaraj RMFirst Published Apr 28, 2019, 5:24 PM IST
Highlights

மக்களவைத் தேர்தலில், நாட்டின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானி, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மிலிந்த் தியோராவுக்கு சமீபத்தில் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மோடியின் பேரணியில் கலந்துகொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மக்களவைத் தேர்தலில், நாட்டின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானி, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மிலிந்த் தியோராவுக்கு சமீபத்தில் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மோடியின் பேரணியில் கலந்துகொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் அம்பானி நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என மேடை தொடரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி வருகிறார். மேலும் முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி. ரபேல் விமான ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் ராகுல் காந்தி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

 

இந்நிலையில் மும்பை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய இணையமைச்சர் மிலிந்த் தியோரா போட்டியிடுகிறார். இவர் ஒரு பிரச்சார வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மும்பையில் குறுந்தொழில் முதல் பெரும் தொழிற்சாலைகள் வரை செழிக்க மிலிந்த் தியோரா பாடுபடுவார். இதன்மூலம் திறமையான இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும்” என கூறியிருந்தார். இதனையடுத்து மிலிந் தியோராவிற்கு, முகேஷ் அம்பானி தனது ஆதரவை தெரிவித்திருந்தார். இது தேசிய அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

 

இந்நிலையில் பாஜக சார்பில் பிரதமர் மோடியின் தேர்தல் பேரணியில் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி கலந்துகொண்டார். பாந்த்ரா குர்லா வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பேரணியில் முன்வரிசையில் அமர்ந்திருந்த ஆனந்த் அம்பானி, மோடி பேசுவதை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளது. இதற்கிடையே அப்பா முகேஷ் அம்பானி காங்கிரஸுக்கு ஆதரவு கோரிய நிலையில், மகன் ஆனந்த் அம்பானி பாஜக பேரணியில் கலந்துகொண்டதை நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

click me!