செந்தில் பாலாஜியை தோற்கடிக்க தேர்தலுக்கு முந்தைய நாள் இப்படி ஒரு திட்டமா..? ஓகே சொன்ன அதிமுக - அமமுக....!

By ezhil mozhiFirst Published Apr 28, 2019, 2:25 PM IST
Highlights

மக்களவை தேர்தலை பொறுத்த வரையில் அதிமுக மற்றும் அமமுக இரண்டும் எதிர் எதிர் திசைகள் பயணித்து வருகிறது.

மக்களவை தேர்தலை பொறுத்த வரையில் அதிமுக மற்றும் அமமுக இரண்டும் எதிர் எதிர் திசைகள் பயணித்து வருகிறது. இருந்தாலும் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜியை வீழ்த்த அதிமுகவும் அமமுகவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டிடிவி தினகரன் அணியில் இருந்த செந்தில் பாலாஜி திமுகவிற்கு தாவியதை அடுத்து அவர் ஸ்லீப்பர் செல்லாக செயல்படுவார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் எப்படியாவது செந்தில் பாலாஜி தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் டிடிவி தினகரனும், அதிமுகவும் மும்முரம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.மேலும் செந்தில்பாலாஜியின் அதிருப்தியாளர்கள் அனைவரும் அவருக்கு எதிராக செயல்பட உள்ளதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

தேர்தலுக்கு முந்தைய நாள் பணப்பட்டுவாடா செய்ய செந்தில்பாலாஜி திட்டமிட்டு உள்ளதாகவும், அந்த சமயத்தில் மிகவும் கவனமாக செயல்பட்டு பணப்பட்டுவாடாவை தடுத்து கையும் களவுமாக பிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கவும் தயாராக இருக்கிறதாம் ஒரு டீம்.

இதனை வைத்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க விடாமல் செய்வது என திட்டமிட்டுள்ளார்களாம் அதிமுக மற்றும் அமமுக என ஒரு கருத்து பரவி வருகிறது.
இருந்தபோதிலும், "யார் என்ன செய்தாலும் திமுக தொண்டர்களின் ஆதரவால் நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன்" என செந்தில் பாலாஜி ஒரு பக்கம் சொல்லி வருகிறாராம். இதுதான் சங்கதி..!

click me!