“ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வர் ஆகும் யோகமே இல்லை…!!!” – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி “பகீர்” பேச்சு

 
Published : Mar 01, 2017, 10:53 AM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
“ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வர் ஆகும் யோகமே இல்லை…!!!” – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி “பகீர்” பேச்சு

சுருக்கம்

Former Chief Minister Jayalalithaas birthday party in Virudhunagar district Thiruthangal public meeting was held. In addition a special invitee attended by Minister Rajendra Balaji

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது. அதில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர், ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி இருந்தால் அதிமுக எம்எல்ஏக்கள் 10 பேர் அவருக்கு சாதகமாக வாக்களித்து இருப்பார்கள் எனஸ்டாலின் கணக்கு போட்டுவிட்டார். அதன்மூலம் ஆட்சியை பிடித்து விடலாம் என நினைக்கிறார்.

ஆனால் அதுபோன்று ரகசிய வாக்கெடுப்பு நடத்தி இருந்தால், திமுக எம்எல்ஏக்கள் 50 பேர், அதிமுகவில் இணைந்து இருப்பார்கள். எங்களின் 122 எம்எல்ஏக்களுடன், திமுக எம்எல்ஏக்கள் 50 பேரும் சேர்ந்தால், எங்களது பலம் மேலும் அதிகரித்திருக்கும்.

எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, அதன் மூலம் ஆட்சியை பிடிக்க நினைக்கிறார் ஸ்டாலின். அது இந்த நடக்கவே நடக்காது. ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வர் ஆகும் யோகமே இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு