ஓபிஎஸ்க்கு பகிரங்க ஆதரவு.. சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர்…

First Published Mar 1, 2017, 10:39 AM IST
Highlights
Shashikala against ops teniyaic active in the pro and one policeman was suspended.


சசிகலாவுக்கு எதிராகவும், ஓபிஎஸ்க்கு ஆதரவாகவும் செயல்பட்ட தேனியைச் சேர்ந்த போலீஸ்காரர்  ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் வேல் முருகன். அதிமுக வைச் சேர்ந்தவரான இவர் சொத்துக்குவிப்பு வழக்கில்,ஜெயலலிதா சிறையில் இருந்தபோது,தேனி நகரில் போலீஸ் உடையில் உண்ணாவிரதம் இருந்தார்.

அதேபோன்று ஜெயலலிதா உடல்நலம் இன்றி மருத்துவமனையில் இருந்த போது, மொட்டை அடித்துக் கொண்டு விரதம் இருந்து தனது விசுவாசத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வேல்முருகன் ஓபிஎஸ் ஆதரவாளராக மாறினார்,மேலும் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டார். சசிகலா முதலமைச்சராகக் கூடாது என ஜெயலலிதாவின் நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்..

இந்நிலையில் தொடர்ந்து அவரது செயல்பாடுகள் அரசுக்கு எதிராக ,இருப்பதாக கூறி அவரை காவல் துறை உயரதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

போலீஸ் சீருடை அணிந்து பொது இடங்களில் அரசியல் பேசியதோடு மட்டுமல்லாமல், அரசுக்கு எதிராக செயல் பட்டதாகக் கூறி வேல்முருகன் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

click me!