
இங்க எதுக்கு வந்தீங்க? கூவத்தூர் போயிடுங்க…அமைச்சரை ஓடஓட விரட்டியடித்த பொது மக்கள்..
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவரே முதலமைச்சராகும் வகையில் சசிகலாவை அதிமுக சட்டமன்றகுழுத் தலைவராக எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுத்தனர்.
இதனையடுத்து அக்கட்சி பிளவுபட்டு ஓபிஎஸ் அணி தனியாக செயல்படத் தொடங்கியது. ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் சசகிலாவுக்கு மண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படடார்.சட்டப் பேரவையில்நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் போது தங்களது ஆதரவு எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு சென்றுவிடாத வகையில் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால் இந்த எம்எல்ஏக்களுக்கு பொது மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஓபிஎஸ்க்கு இவர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என தமிழக மக்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் சசிகலாவுக்கே ஆதரவு அளித்தனர்.
இந்நிலையில், தங்கள் தொகுதி பக்கம் செல்லும் எம்எல்ஏ மற்றும் அமைச்சர்களுக்குபொது மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் தொகுதிக்குள் செல்லும்போது விரட்டியடிக்கப்பட்டு வருகின்றனர்.
அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜய பாஸ்கர் மற்றும் நடிகர் கருணாஸ் உள்ளிட்டோர் தொகுதிக்குள் செல்லும்போது விரட்டியடிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஆவடி தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சருமான பெஞ்சமின், தனது ஆதரவாளர்களுடன் தொகுதிக்குள் சென்றார். அப்போது, அவரை வழிமறித்த பொது மக்கள் அவரை திரும்ப போகச் சொல்லி கோஷம் எழுப்பினர். இங்க எதுக்கு வந்தீங்க? கூவத்தூர் போங்க..உங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொது மக்களின் ஆவேசத்தால் மிரண்டுபோன அமைச்சர் பெஞ்சமின் உடனடியாக அங்கிருந்து தப்பியோடினார்.