
எது நடக்ககூடாது என்று ஜெயலலிதா நினைத்தார்களோ அது இன்றைக்கு நடந்து விட்டது. இருப்பினும் கட்சியையும் ஆட்சியையும் சசிகலாவிடம் இருந்து ஓ.பி.எஸ் மீட்டெடுப்பார் என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
எடப்பாடி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து பொதுமக்களின் பெரும்பாலான ஆதரவு ஓ.பி.எஸ் பக்கமே நிலைக்கிறது.
பொதுமக்கள், இளைஞர்கள், தொண்டர்கள், மாணவர்கள் என ஓ.பி.எஸ் தரப்பு நீண்டுகொண்டே போகிறது.
இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு வலுத்து கொண்டே போகிறது.
அணி அணியாய் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்து மக்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.
மேலும் ஜெயலலிதா மரணத்திற்கு நீதிகேட்டு வரும் மார்ச் 8 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் எனவும் ஓபிஎஸ் அணியினர் அறிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஆதரவு அளித்தனர்.
இந்த கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது :
அதிமுக எம்.எல் ஏ க்கள் சசிகலாவிடவிடம் விலை போயிவிட்டார்கள். எந்த எம்.எல்.ஏக்களும் போலீஸ் பாதுகாப்பு இன்றி தங்களது தொகுதிக்குள் செல்லமுடியாது நிலை உள்ளது.
சசிகலா எனக்கு உதவியாளர் மட்டும் தான் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தனது சொத்துக்கள் அனைத்தும் கட்சிக்குத்தான் சொந்தம் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மேலும் கட்சி யாரிடம் செல்லக்கூடாது என்று ஜெயலலிதா நினைத்தார்களோ அதற்கு மாறாக இன்றைக்கு நடந்து விட்டது. இருப்பினும் கட்சியையும் ஆட்சியையும் சசிகலாவிடம் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மீட்டெடுப்பார்
இவ்வாறு அவர் பேசினார்.