
உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அறிவாலையத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில், திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.
இதனிடையே ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதி விசாரணை கோரி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே ஓ.பி.எஸ் வரும் 8 ஆம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்ள போவதாக ஓ.பி.எஸ் தரப்பினர் காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.
தொடர்ந்து திமுக பேச்சாளர் கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், பின்னர், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது :
தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகள் குறித்து மக்களுக்கு எடுத்து கூற பேச்சாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
கைதிகளை அரசாங்கம் பராமரிப்பது தான் வழக்கம். ஆனால் தமிழகத்தில் கைதிகள் அரசாங்கத்தை பராமரிக்கும் அவல நிலை நிலவுகிறது.
ஓ.பன்னீர்செல்வத்தின் காலம் கடந்த உண்ணாவிரத போராட்டத்தை வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.