
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதி விசாரணை கோரி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே ஓ.பி.எஸ் வரும் 8 ஆம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்ள போவதாக ஓ.பி.எஸ் தரப்பினர் காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலா அணி ஓ.பி.எஸ் அணி இரண்டாக பிரிந்ததையடுத்து ஓ.பி.எஸ் சசிகலாவுக்கு எதிராக பல குற்றசாட்டுகளை முன் வைத்தார்.
மேலும் சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதால் ஆட்சி எடப்பாடி கைக்கு மாறியது.
ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாகவே பொதுமக்களாலும், அதிமுக அடிமட்ட தொண்டர்களாலும் தற்போது வரை பேசப்பட்டு வருகிறது.
இதையடுத்து தற்போதைய அரசுக்கு திராணி இருந்தால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை குழு அமைக்கட்டும் என எடப்பாடிக்கு ஓ.பி.எஸ் சவால் விடுத்தார்.
இந்நிலையில், ஜெ மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடுத்தகட்டமாக ஓ.பி.எஸ் வரும் 8 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரதம் மேற்கொள்ள போவதாக அவரது தரப்பு தெரிவித்துள்ளனர்.
உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரி ஓ.பி.எஸ் அணி அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காவல்நிலயத்தில் மனு அளித்தார்.
ஆனால் இன்றுவரை ஜெயலலிதா மரணம் குறித்து எவ்வித விசாரணையும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே இதுகுறித்த நீதி விசாரணை கேட்டு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே வரும் 8 ஆம் தேதி ஓ.பி.எஸ் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கபட்டிருந்தது.