
சேலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான விஜயலட்சுமி பழனிசாமி, சென்னையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மாவட்டமான சேலம் மாவட்டத்தில் இருந்து 1000 பேர் ஓ.பி.எஸ் அணியில் இணைந்திருப்பது பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆட்டத்தை கொடுத்துள்ளது.
சசிகலா தரப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் பிரிந்ததையடுத்து அவருக்கு ஆதரவு பெருகி கொண்டே போகிறது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரசே செயல்படாத நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் வளர்ந்த பாடு இல்லை. பொதுமக்களை பாதுகாக்க வேண்டும், ஓட்டு போட்டவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற மனநிலை யாரிடமும் மக்களுக்கு தென்படவில்லை.
ஜெயலலிதா மரணத்தில் ஏற்கனவே சசிகலாவுக்கு தொடர்பு உண்டு என மக்கள் கொதித்திருந்த நிலையில் ஓ.பி.எஸ் போர்க்கொடி தூக்கியதை பொதுமக்கள் வரவேற்றனர்.
மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சினிமா பிரபலங்கள், மற்ற கட்சி நிர்வாகிகள் என பலரும் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் தினமும் ஆதரவாளர்கள் சந்தித்து ஓ.பி.எஸ் பேசி வருகிறார். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தி, அவர் களின் கருத்துக்களை கேட்கும் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவை பலப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், சேலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான விஜயலட்சுமி பழனிசாமி, சென்னையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
அப்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டம் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது சேலத்தில் தனது அணிக்கு இருக்கும் ஆதரவு குறித்தும், சசிகலா எதிர்ப்பு அணிபற்றியும் கேட்டறிந்தார்.
இதையடுத்து சோழிங்க நல்லூர் தே.மு.தி.க பகுதி செயலாளர் மெட்ரோ குமார் தலைமையில் சுமார் 1000 பேர் ஓ.பி.எஸ்ஸை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ம.தி.மு.க.வை சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.