அமெரிக்கால போயி வெற்றிக் கொடி நாட்டப் போறாரு நம்ம ஆளு !! எடப்பாடியைக் கொண்டாடிய ராஜேந்தி பாலாஜி !!

By Selvanayagam PFirst Published Aug 17, 2019, 9:25 PM IST
Highlights

தமிழத்துக்கு முதலீடுகளை ஈர்க்க செல்லும் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியின்  வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28 ஆம் தேதி அமெரிக்கா , இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு 10 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார்.

அதே நேரத்தில் தமிழகத்தில் ஏற்கனவே உலக மூதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றதே. அதில் முதலீடுகள் ஈர்க்கப்படவில்லையா என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இதனிடையே வெளிநாடு செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பொறுப்புகளை, துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சிடம் கொடுக்காமல் அமைச்சர் தங்கமணியிடம் கொடுத்துச் செல்லப் போவதாக தகவ்லகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் ராஜேந்தி பாலாஜி , முதலீடுகளை ஈர்க்கச் செல்லும் முதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும் என தெரிவித்தார். . தேசிய பார்வையில் பாஜக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அதிமுகவை கவர்ந்துள்ளன என தெரிவித்த ராஜேந்திர பாலாஜி . நல்லவர்கள் யார் ஆதரவு கொடுத்தாலும் அதிமுக அதை ஏற்றுக்கொள்ளும். என தெரிவித்தார்.

எந்த முதலமைச்சரும் படைக்காத சாதனையை முதலமைச்சர் படைத்து வருகிறார், அவர் மீது உள்ள ஆதங்கத்தில் முதல்வரின் அமெரிக்க பயணத்தை ஸ்டாலின் குறை கூறுகிறார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்..

click me!