100 ரூபாய் சம்பளம் வாங்குனவங்க இன்னைக்கு 500 ரூபாய் வாங்குறாங்கள்ல !! அதை வச்சு பால் வாங்குங்க !! நக்கலடித்த ராஜேந்தி பாலாஜி !!

By Selvanayagam PFirst Published Aug 17, 2019, 7:53 PM IST
Highlights

நூறு ரூபாய் சம்பளம் வாங்கியவர்கள் இன்று 500 ரூபாய் சம்பளம் வாங்கும்போது பால் விலை உயர்வை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும், பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
 

தமிழகத்தில் பால் கொள்முதல் விலை மற்றும்  விற்பனை விலையை  உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பசும்பால் கொள்முதல் விலை ரூ.4 உயர்ந்து ரூ.32 ஆகிறது. எருமைபால் கொள்முதல் விலை ரூ.6 உயர்ந்து ரூ.41 ஆகிறது.   இந்த பால் கொள்முதல் விலை  உயர்வு நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது. இந்த விலை உயர்வால், 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் அடைவார்கள்.

பால் விலை உயர்வு குறித்து   செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது ஆவின் பால் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பதப்படுத்தும் செலவு, போக்குவரத்து, அலுவலகச் செலவு உயர்ந்துள்ளதால் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது. கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், விற்பனை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது, மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்..

தொடர்ந்து பேசிய அவர், ரூபாய் 100 சம்பளம் வாங்கியவர்கள் இன்று 500 ரூபாய்  வாங்குகிறார்கள். எனவே கால சூழ்நிலைக்கேற்ப விலை உயர்வு தவிர்க்க இயலாது என்று ராஜேந்தி பாலாஜி தெரிவித்தார்.

click me!