அதிமுக சூப்பர் என கூறி பல்டியடித்த திருமா...! ஸ்டாலினை சந்தித்தபின் திடீர் முடிவு...!

By Asianet TamilFirst Published Aug 17, 2019, 6:31 PM IST
Highlights

பள்ளி குழந்தைகளின்  உள்ளத்தின் சாதி நஞ்சை விதைக்க கூடாது. அவர்கள் அங்கு சுதந்திரமாக கல்வி கற்க வேண்டும். ஜனநாயகனத்தை அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். ஆகவே இப்படி பட்ட மதவாத அரசியல்களை பள்ளிக்கூடங்களுக்குள் அனுமதிக்க கூடாது அது  தடுக்கப்பட வேண்டும் என்ற தமிழகஅரசின் நிலைப்பாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது என்றார்.

சாதியை அடையாளப்படுத்தும் வகையிலான கயிறுகளை மாணவர்கள் கட்டக்கூடாது என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு விடுதலை சிறுதலைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தன்னுடைய பிறந்தநாளையொட்டி,அண்ணா அளிவாலயம் சென்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்.பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் தங்கள் சாதியை வெளிப்படுத்தும் வகையில், சாதிக்கயிறுகளை அணிந்து வருவதால், மாணவர்களிடையே சாதி வேறுபாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளதாக கூறினார்.  

சாதி கயிறு விவகாரத்தை எச்.ராஜா போன்றவர்கள் அது இந்துமதத்தின் அடையாளமாகம் என கூறி  திசை திருப்ப முயற்சி செய்வதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.  பள்ளி குழந்தைகளின்  உள்ளத்தின் சாதி நஞ்சை விதைக்க கூடாது. அவர்கள் அங்கு சுதந்திரமாக கல்வி கற்க வேண்டும். ஜனநாயகனத்தை அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். ஆகவே இப்படி பட்ட மதவாத அரசியல்களை பள்ளிக்கூடங்களுக்குள் அனுமதிக்க கூடாது அது  தடுக்கப்பட வேண்டும் என்ற தமிழகஅரசின் நிலைப்பாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது என்றார்.

click me!