அருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடம் !! அதிர்ச்சி தகவல் !!

Published : Aug 17, 2019, 08:16 PM IST
அருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடம் !! அதிர்ச்சி தகவல் !!

சுருக்கம்

முன்னாள் மத்திய நிதி  அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.  

முன்னாள் மத்திய நிதி அமைச்சர்  அருண் ஜெட்லி, உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

கடந்த 9-ம் தேதி மூச்சுத்திணறல்  காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெட்லியின் உடல் நிலை மேலும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று பிற்பகல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று அருண் ஜெட்லியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து நள்ளிரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மருத்துவமனைக்கச் சென்று அருண் ஜெட்லியின் 

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும்  அருண் ஜெட்லியின் உடல் நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐசியூவில், மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு பிறகு அருண் ஜெட்லியின் உடல் நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..