
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை பரேலில் எடுக்க சட்டவல்லுநர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சொத்துகுவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலாவை சிறையில் இருந்து வெளியே எடுக்க அவரது தரப்பினர் தீவிர முயற்சி காட்டி வருகின்றனர். தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்று சட்டவல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையில் மறுசீராய்வு செய்வதற்கான பணிகளும் துரிதகதியில் நடைபெற்று வருகிறது…
இதற்கிடையே கட்சிக்குள் நிலவும் பிணக்குகளையும் பிளவுகளையும் சமாளிக்க சசிகலாவை பரோலில் எடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் திருப்பதியில் ஏழுமலையானை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பரோலில் எடுப்பது குறித்து சட்டவல்லுநர்களிடம் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தார்.