கைதை கொஞ்சம் நிறுத்தி வையுங்கள் சொன்ன KTR.. நிராகரித்த நீதிமன்றம்.. 15 நாள் மதுரை சிறையில் அடைக்க உத்தரவு.!

By vinoth kumarFirst Published Jan 6, 2022, 9:04 AM IST
Highlights

விருதுநகர் அழைத்து வரப்பட்டு மதுரை சரக டிஐஜி காமினி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் ஆகிய இருவரும் ராஜேந்திர பாலாஜியிடம் 3 மணிநேரம் விசாரணை நடைபெற்று வாக்கு மூலம் பெற்ற பின்னர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் முன்பாக  ஆஜர்படுத்தப்பட்டார். 

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த அதிமுக ஆட்சியில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து ராஜேந்திர பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ராஜேந்திர பாலாஜி திடீரென தலைமறைவானார். அவரை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். 

ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதேவேளையில் தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் தேடுதல் பணி நடைபெற்றது. விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டு, செல்போன் சிக்னல் மூலம் போலீஸார் அவரை கண்காணித்தனர்.

இதனிடையே தனிப்படை போலீசாருக்கு ராஜேந்திர பாலாஜி க‌ர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாகவும், பாஜக பிரமுகர்கள் உதவியோடு காரில் வலம் வருவதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் நேற்று பி.எம்.சாலையில் காரில் சென்ற ராஜேந்திர பாலாஜியை மடக்கினர். போலீசாரின் வாகனத்தை பார்த்ததும் தப்பியோட முயன்ற அவரை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனையடுத்து, விருதுநகர் அழைத்து வரப்பட்டு மதுரை சரக டிஐஜி காமினி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் ஆகிய இருவரும் ராஜேந்திர பாலாஜியிடம் 3 மணிநேரம் விசாரணை நடைபெற்று வாக்கு மூலம் பெற்ற பின்னர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் முன்பாக  ஆஜர்படுத்தப்பட்டார். 

அப்போது, முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வர உள்ளதால் கைதை நிறுத்தி வைக்க கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. இதனை நீதிபதி நிராகரித்துவிட்டார். இதனையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார். 

click me!