ராஜேந்திரபாலாஜியின் இன்னோவா குறும்புகள்..! போலீஸ் ஆபீஸருக்கே ஸ்வீட் கொடுத்தாரம்ல?!

By Ganesh RamachandranFirst Published Jan 5, 2022, 4:57 PM IST
Highlights

"என்னப்பே எல்லாம் நம்ம விருதுநகர் மாவட்டத்துக்காரய்ங்க தானே..! என்னமோ என்னைய தெரியாத மாதிரியே பேசுறீகளே..."

தமிழ்நாடு போலீஸுக்கு இருபது நாட்களுக்கும் மேலாக வாட்டர் காட்டிய மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கர்நாடகா மாநிலம் ஹசன் பகுதியில் இன்று கைது செய்தது தமிழக தனிப்படை போலீஸ். லஞ்ச் டைம் நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் காவி வேட்டியும், டிஷர்ட்டுமாக காஸ்ட்லி கார் ஒன்றிலிருந்து இறங்கி, மாஸ்க் அணிந்தபடி சில நிமிடங்கள் வெளியே உலாவிய பாலாஜியை பக்காவாக ஸ்கெட்ச் போட்டு ரவுண்ட் அப் செய்தனர் போலீஸார்.

பாலாஜியின் காரை, கர்நாடக மாநில பதிவெண் கொண்ட வாடகை இன்னோவா ஒன்றில், அவருக்கு தெரியாமலே சேஸ் செய்து கொண்டிருந்தனர் போலீஸார். தமிழக டி.ஜி.பி. அலுவலகத்துக்கு அப்டேட்ஸை கொடுத்துக் கொண்டே இருந்தவர்கள், மேலிட உத்தரவு வந்த அடுத்த நொடியில் மின்னலாக செயல்பட்டனர். ரா.பாலாஜியின் காரை நெருக்கி தங்களின் இன்னோவாவை நிறுத்தினர். பின் மளமளவென இறங்கி ஓடி அவரை வளைத்தனர் மஃப்டி போலீஸார். இதை பாலாஜி எதிர்பார்க்கவில்லை.

ஆனாலும் பெரிதாய் பதறாமல் கூலாக டீல் பண்ண துவங்கினார். கொஞ்சம் போலீஸ் அசந்திருந்தாலும் தன் காரிலேறி பறந்திருப்பார். ஆனால் அவர் காரை எடுக்க இயலாதபடி அதற்கு முன் தங்கள் காரை மறித்துப்போட்டனர் போலீஸார். சூழலை புரிந்து கொண்ட பாலாஜி, தன் காரிலிருந்த கருப்பு நிற பேக்கை தன்னுடன் இருந்த நபரை எடுத்து தர சொல்லி கேட்டு வாங்கிக் கொண்டு கைதானார்.

இதற்கிடையில், சீருடை அணியாத சிலர் ஒரு நபரை சுற்றி வளைத்து காரில் ஏற்றுவதை பார்த்த அந்த பகுதி மக்கள் ‘யாரோ கிட்நாப்பர் மாதிரி இருக்குது’ என்று கன்னடத்தில் பரபரத்தனர். ஆனால் எதற்கும் அலட்டிக்காத தமிழக போலீஸோ, ‘சார் வாங்க’ என்று மரியாதையாக ராஜேந்திர பாலாஜியை அழைத்துச் சென்று, இனோவாவின் நடு சீட்டில் உட்கார வைத்து பறந்தனர்.

காரில் வரவே கொஞ்சம் சீன் பண்ணியிருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. அந்த காருக்குள் ஒரு உயர் போலீஸ் அதிகாரி இருப்பதை அவருக்குச் சுட்டிக்காட்டியுள்ளனர் மற்ற காவலர்கள். அதற்கு அவரோ ‘என்னப்பே எல்லாம் நம்ம விருதுநகர் மாவட்டத்துக்காரய்ங்க தானே..! என்னமோ என்னைய தெரியாத மாதிரியே பேசுறீகளே. எங்க ஆட்சி இருந்தப்ப தீபாவளி, நியூ இயருக்கெல்லாம் ஆவின்ல இருந்து ஸ்வீட்ஸை அள்ளியள்ளி போலீஸுக்கு கொடுத்திருக்கேம், மறந்துட்டீகளோ? உங்க பெரிய ஆபீஸர்….(ஒரு ஐ.ஜி. லெவல் அதிகாரியின் பெயரைச் சொல்லி)-க்கெல்லாம் வீட்டுக்கே கிலோ கிலோவா ஸ்வீட்ஸ் சப்ளையாகி இருக்குது. அவரு தன்னோட சொந்தக்காரய்ங்க, சொக்காரய்ங்க, வீட்டுக்கு வந்தவன் போனவன் விலாசத்தையெல்லாம் சொல்லி கிலோ கிலோவா பார்சல் கொடுக்க சொன்னாருப்பே. இன்னைக்கு என்னமோ என்னைய யாருன்னே தெரியாத மாதிரி பேசுறீக!’ என்று கலாய்த்திருக்கிறார்.

இன்னோவாவுக்குள் ராஜேந்திர பாலாஜி செய்த அக்குறும்புகளுக்கு சிரிப்பதா அல்லது தலையிலடித்துக் கொள்வதா என்று புரியாமலேயே  பயணத்தை தொடர்ந்திருக்கின்றனர் போலீஸார்.

ப்பார்றா!

click me!