வீடேறி உதைப்பேன்  - ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

Asianet News Tamil  
Published : Jun 27, 2017, 07:25 PM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
 வீடேறி உதைப்பேன்  - ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

சுருக்கம்

rajendhira balaji pressure


பால் கலப்பட விவகாரத்தில் தனியார் பால் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு வைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக குறிப்பிட்டார். உள்ளூர் நம்பராக இருந்தால் வீடேறி உதைப்பேன் வெளியூர் போனா போச்சு என்று ஆவேசமாக கூறினார்.
 பாலில் கலப்பட புகார் வந்ததில் இருந்து பலரும் என்னை மிரட்டுகிறார்கள் இதுவரை நான் பத்திரிக்கைகாரர்களுக்கு சொல்லவில்லை இப்பத்தான் முதன் முதன் முதலா சொல்றேன் ராத்திரி  12 மணிக்கு போன போட்டு மிரட்டுறாங்க என்று தெரிவித்தார்.
உங்களை எதற்கு மிரட்ட வேண்டும் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு தனியார் கம்பெனிகள் எவ்வளவு பெரிய பிஸ்னெஸு நான் பாட்டுக்கு பேட்டி கொடுத்தா மிரட்ட மாட்டானா? வேறு ஆள வச்சி மிரட்ட மாட்டாங்களா? 
உள்ளூரா இருந்தா வீடேறி உதைச்சிருப்பேன் வெளியூறா போச்சு பூரா அம்புட்டு பையலும் வெளியூர்ல இருந்து போன் பண்றானுங்க என்றார். கடத்தல் முயற்சி எதாவது நடந்ததா என்று கேட்டதற்கு நான் என்ன ஒத்த ஆளா தூக்கிட்டு போறதுக்கு என்று பதில் கேள்வி கேட்டார். 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடியை கவிழ்க்க ஓபிஎஸ்... ஸ்டாலின் அதிரடி வியூகம்..! தென்மாவட்டங்களில் செக்..!
உன் அழகில் மயங்கியே உன் கணவருக்கு வேலை கொடுத்தேன்..! அதிகாரியின் மனைவி மீது ஆசைப்பட்ட டிரம்ப் வீடியோ.!