ஜோதிராதித்ய சிந்தியா வழியில் சச்சின் பைலட்? காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதியா? அலறும் முதல்வர்.. மறுக்கும் BJP

By vinoth kumarFirst Published Jul 12, 2020, 4:41 PM IST
Highlights

ராஜஸ்தானில் முதல்வர் அசோக்  கேலாட் ஆட்சிக்கு எதிராக துணை முதல்வர் சச்சின் பைலட் போர் கொடி தூக்கி இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக்  கேலாட் ஆட்சிக்கு எதிராக துணை முதல்வர் சச்சின் பைலட் போர் கொடி தூக்கி இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கேலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியான பாஜகவுக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் கிடையாது. இதனால் அசோக் கேலாட் தொடக்கத்தில் இருந்தே ஒருவித அச்சத்துடனேயே ஆட்சி செய்து வந்தார். ஆனால், அங்கு துணை முதல்வராக உள்ள சச்சின் பைலட்டுக்கும், முதல்வர் கெலோட்டுக்கும் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது.

அசோக் கெலோட்டின் நடவடிக்கையால் சச்சின் பைலட் ஆரம்பத்தில் இருந்தே அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜகவினர் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. எனினும் மாநிலங்களவைத் தேர்தல் எந்த பிரச்சினை இன்றி நடந்து முடிந்தது. 

இந்நிலையில், ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயலுவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். துணை முதல்வர் சச்சின் பைலட் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு 19 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும் தெரிகிறது. இந்நிலையில், அசோக் கெலோட்டின் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. 

மத்திய பிரதேசத்தில் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்று ஜோதிராதித்ய சிந்தியா அதிருப்தியில் இருந்து வந்தார். இதையடுத்து 22 எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி அங்கு ஆட்சியை கலைத்தார். அதுபோல ஜோதிராதித்ய சிந்தியா வழியில் சச்சின் பைலட் செல்ல வாய்ப்புள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

click me!